Wednesday 1 January 2014

Alaipayuthey - "Convincing"


Sharing a very interesting scene from Alaipayuthey. In 100 years of Indian Cinema (Even from the birth of man-kind..), a boy convincing a girl - to accept his love is a cliche actually! Yet this one is special, matured & unforgettable (to me atleast..).

A Classy class for all aspiring film-makers to set a conversation in a film!
                                                               

"யே.. என்னாச்சு?"

"இது சரியா வராது போலிருக்கு..
விட்டுடலாம்..
எல்லாத்தையும் மறந்துட்டு கை குலுக்கிகலாம்..
தோள் shrug பண்ணிக்கலாம்..
bye சொல்லிடலாம்..
உலகம் நின்னா போய்டும்..?"

"எங்க அப்பா ஏதும் தப்பா பேசுனாரா?"

"ஒன்னும் சரி வரல..
பேசுனாங்க..
தப்பா பேசுனாங்க..
தாறுமாறா பேசுனாங்க..
இந்தியா பாகிஸ்தான் பேச்சு மாதிரி ஆயிடுச்சு."

"ஷக்தி.. அவங்க ரெண்டு பேருமா கல்யாணம் பண்ணிக்க போறாங்க? நீயும் நானும் தான்.. சும்மா ஒரு மரியாதைக்கு கேட்டோம்.."

"கார்த்திக் என்னை என்ன செய்ய சொல்ற?"

"நம்ம விருப்பத்துக்கு அவங்க மதிப்பு கொடுக்கலைனா அவங்கள விட்டுடலாம்.."

"என்னால முடியாது.."

"என்ன முடியாது?"

"அப்பா, அம்மா, வீடு, நாய்க்குட்டி எல்லாத்தையும் என்னாலவிட முடியாது.."

"அப்டினா.. இந்த காதல் உனக்கு அவ்ளோ பெருசில்ல?"

"உனக்கு என்ன எவ்ள நாளா தெரியும்?
இருபது வாரமா?
எங்க அப்பாம்மா எனக்கு இருபது வருஷமா உயிர்.
உனக்காக நான் அவங்கள விட முடியாது.."

"ஆனா உனக்காக நான் எத வேணா விட்டுட்டு வருவேன்.."

"இன்னிக்கி ஒரு பொண்ணுக்காக அம்மா அப்பா எல்லாரையும் விட்டுட்டு வருவ.. நாளைக்கி இன்னொரு பொண்ணுக்காக என்ன விட மாட்டேன்னு என்ன நிச்சயம்?"

"Hello.. உங்க logic சகிக்கல..
இப்ப என்ன? தியாகமா? நான் தான் பலியா?"

"அது என்ன நமக்குள்ள அப்டி ஒரு காதல்?
பார்த்தோம்.
பேசுனோம்..
கொஞ்ச சுத்துன..
துரத்துன..
சிரிக்க வச்ச..
இப்ப அழ வைக்கற..
அவ்ளோதான்..
நான் முன்னாடியே No சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப?"

"உனக்கு அதிர்ஷ்டம் இல்ல.. நீ கொடுத்து வச்சது அவ்ளோதான்னு நெனைப்பேன்.."

"இப்போ அப்டி நெனைச்சுக்கோ.."

"ஓய்.. இரு.. ஷக்தி.."

"நீ சொல்றது சரி.. இந்த காதல் கீதல்லாம் பெரிய கத்திரிக்காய் இல்ல.. ஒத்துக்குறேன்.
ஆனா இப்போ கை விட்டுடாத.
கொஞ்சம் டைம் கொடு..
ஒரு வாரம்..
பத்தாம் தேதி வரைக்கும்..
அதுக்கப்றமும் இப்படியே பீல் பண்ணுனா சொல்லு,, விட்டுடுவோம்.."

"ஒரு வாரத்துல என்ன ஆக போகுது? எதுக்கு இந்த unnecessary?"

"ஒரு வாரத்துல என்ன வேணாலும் ஆகலாம்.."

<பார்த்து..>

"நான் உன்ன convince பண்ணலாம்..
நீ மனசு மாறலாம்..
இல்ல நான் வேற ஒரு பொண்ண பார்த்து மயங்கி விழுந்தடலாம்.."

<ஹே.. என்ன பண்ற நீ?>

"ஷக்தி ஒரே வாரம்.. சும்மா.. meet பண்ணலாம் பேசலாம். ஓகே? சரியா?"

"முடியாது."

"எனக்காக சரின்னு சொல்லு.."