Sunday 13 October 2013

எழுத்தாளர்களும் - தமிழ் சினிமாவும்

மணிரத்னம் - சுஜாதா (அல்லது) ஷங்கர் - சுஜாதா : இதற்கு பிறகு எழுத்தாளர்களின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லையே? ஏன்?

Steephan Sansigan :: என்னை பொறுத்தவரையில் சுஜாதா என்ற ஒரு எழுத்தாளனை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை...

Kp Tharsigan :: ஜெயமோகனுக்கு இன்னும் நல்ல ஒரு கூட்டணி அமையவில்லை  என்று நினைக்கிறேன்.

Suhansid Srikanth :: ஜெயமோகன் செய்வதெல்லாம் சீரியஸ் ரகமாக உள்ளதே! சுஜாதா கொடுத்த அந்த ரசனை வரவில்லை.

Omar Sheriff :: மன்னிக்கவும் தமிழ் சினிமா - எழுத்தாளர்கள் என்று ஒரு கூட்டணி ஒருபோதும் இருந்ததில்லை. சுஜாதாவை "உபயோகப்படுத்திக் கொண்டனர்" தமக்கேற்றவாறு.. அதுதான் உண்மை.

Suhansid Srikanth :: கேரளாவில் உள்ளதில் 10% கூட நாம் எழுத்தாளர்களுடன் சேர்ந்து முயலவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சுஜாதா இறந்த பின் இருந்ததும் குறைந்துவிட்டதோ என்பதே என் கேள்வி! சுஜாதா ஒப்புக்கொண்ட படங்களில் அவரது பணி சிறப்பாகவே இருந்தது. உயிரே, இந்தியன், அந்நியன், கன்னத்தில் முத்தமிட்டால். எத்தனை ரசனையான படைப்புகள்!! ஒரு எழுத்தாளன் சினிமாவில் எந்த அளவிற்கு தனது ஆளுமையை, நடையை கதாபாத்திரங்களில் கொண்டுவரலாம் என்பதற்கு உதாரணங்கள் (சிவாஜி போன்ற சில படங்கள் தவிர்த்து..)

Jay Kumar :: Wat abt K. V. Anand + Subha ???

Suhansid Srikanth
:: சுபா? அவர் செய்வது படம்! பரபரவென ஓடும் காட்சிகளின் தொகுப்பு. காதலோ, உணர்வுகளோ எதுவும் மனதில் நிற்காமல் சட் சட்டென்று மாறும் ஒரு வணிக கலவையை உருவாக்கி தருகிறார். அவ்வளவே. அது சினிமா அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

Omar Sheriff
:: சுஜாதாவின் திறமையை வசனம் எழுதுவதற்காக வேண்டி மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டனர். மற்றபடி திரைக்கதை, அவரது நாவல் (அ) சிறுகதையை மையமாக வைத்து எடுக்கவில்லை. தமிழ் சினிமாவில் சுஜாதா வெறும் வசனகர்த்தா மட்டுமே. (சுஜாதவின் எழுத்து மீது எனக்கு மதிப்பு உண்டு ஆனால் அவரது எழுத்தரசியல் மீது காட்டமான விமர்சனங்கள் உண்டு)

Steephan Sansigan
:: //சுஜாதாவின் திறமையை வசனம் எழுதுவதற்காக வேண்டி மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டனர்// இது தான் மிகப்பொருத்தமான கூற்று

Steephan Sansigan
:: "கன்னத்தில் முத்தமிட்டால்" இது ஒரு படைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு இனத்தின் புரட்சிகள் மீதான செல்வாக்கை தனது வணிக நோக்கத்திற்காக பயன்படுத்திய மிக மோசமான் ஒரு செயல்...

Suhansid Srikanth
:: அந்த படம் எந்த இனத்திற்கும் சார்பாக எடுத்த படம் அல்ல. ஒன்பது வயது சிறுமி அமுதா தன் தாயை தேடி செல்லும் தேடலில், அவள் பார்வையில் நிகழும் ஒரு யுத்தத்தின் கதை.. அதில் நீங்கள் அரசியலை தேடினால் படத்தை ரசித்திருக்க முடியாது.

Steephan Sansigan
:: இது மிகவும் வேதனைக்கு உரிய பதில். சினிமா எனும் ஊடகம் ஒரு வாழ்க்கை கண்ணாடி தான். எங்கள் போராட்டம் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல் இது போன்ற கலைகள் ஊடாக தவறான பரப்புரைகள் மேற்க்கொள்வது ஒரு படைப்பிற்கோ, நல்ல படைப்பாளிக்கோ அழகில்லை...
 
Omar Sheriff
:: அரசியலை தேட முடியாதா? நல்ல கேள்வி. தமிழ் சினிமாவில் ஊடாடும் அரசியலை தவிர்த்து விட்டால் எல்லாமே சிறந்த படங்கள்தான். சாதிய, இந்துத்துவ அரசியல் கூறுகளை புறந்தள்ளிவிட்டு பார்ப்பது எனக்கு சாத்தியமில்லாத செயல். இலங்கை பிரச்சினை பற்றிய எந்தவித புரிதலுமின்றி எடுக்கப்பட்ட படம் கன்னத்தில் முத்தமிட்டால்... அவ்வாறு மகள் - தாய் தேடல் மட்டும்தான் முக்கியமென்றால் வேறு கதைக்களனை நாடியிருக்கலாமே.

Suhansid Srikanth
:: அரசியலை தேடாதீர்கள் என்று சொல்லவில்லை. அரசியலை மட்டுமே தேடினால் படத்தின் கதை பேசும் உணர்வுகளை உள்வாங்க முடியாது என்றேன். ஒரு குழந்தையின் பார்வையில் செல்லும் கதையில், நீங்கள் உங்கள் மனம் அறிந்த அரசியலை பொருத்தி பார்ப்பது சரியல்ல என்றேன்.
 
Suhansid Srikanth
:: "தேயிலை தொழிலாளிகள் பட்ட கஷ்டத்தில் காசு பார்ப்பதா? பிச்சைக்காரர்கள் படும் அவலத்தில் காசு பார்ப்பதா?" என்று பாலா படங்களை பார்த்து இதே கேள்வியை எழுப்புவீர்களா? அவர் செய்வது தான் ஏழ்மையை பிரதானபடுத்தி வணிகம் செய்வது!! மணிரத்னம் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் செய்தது அல்ல..

Steephan Sansigan
:: பாலா ஒரு போதும் யதார்த்த சூழல் மீது தனது சுய லாப நோக்க எண்ணங்களை புகுத்தவில்லை. அவருடைய படைப்புக்கள் எவற்றிலும் யதார்த்த சூழல் மாற்றப்படுவதில்லை

Suhansid Srikanth
:: பாலா படங்களில் வணிக நோக்கம் இல்லையா? ஏழ்மையை சுற்றி நகரும் கதை எல்லாம் நல்ல சினிமா ஆவதில்லை. கன்னத்தில் முத்தமிட்டாலின் சினிமா மொழி உலகிற்கு பொதுவானது. பரதேசியில் என்ன நிகழ்ந்தது? கூத்து - கும்மாளம் எல்லாம் முடிந்து கதைக்குள் நுழைவதற்கே 1st half முழுவதும் எடுத்துக்கொண்டார்!

Suhansid Srikanth
:: ஒரு குழந்தையின் பார்வையில் யுத்தம் எப்படி தெரியுமோ அதுவே படத்தில் காட்டப்பட்டது.. அந்த படத்தின் களம் தான் யுத்தம்.. கதை ஒரு அம்மாவை தேடி செல்லும் சிறுமியை பற்றி.. அதில் ஏன் அரசியல் கலக்க வேண்டும்? இதே கதை அந்த தந்தை (எழுத்தாளர் திருசெல்வன்) பார்வையில் சொல்லப்பட்டிருந்து, அதில் அரசியல் பார்வை தெளிவாக இல்லை என்று நீங்கள் வாதாடினால் நான் ஏற்றுக்கொள்வேன். ஒரு ஒன்பது வயது சிறுமியின் கண்ணோட்டத்தில் அவள் காணும் வெடிகுண்டு புகையும், சிதறி விழும் மனித உடலும் தான் மிகப்பெரிய வன்முறை! அவள் மனதை உலுக்க அதுவே போதுமானது!

Steephan Sansigan
:: சகோ! இப்பொழுது எங்கள் விவாதம் ஒரு படைப்பின் மீது மட்டுமே.. அந்த படைப்பை தாங்கி நிற்கும் எந்த பாத்திரத்தையும் பற்றியதல்ல...
 
Suhansid Srikanth
:: படைப்பின் கதை சொல்லும் விதம் பாத்திரங்களை பொறுத்ததே.. வெடிகுண்டை நானோ, நீங்களோ பார்க்கும் கோணம் வேறு. ஒரு குழந்தை பார்க்கும் கோணம் வேறு.

Steephan Sansigan
:: அதைப்பற்றி எனது விவாதம் இல்லை. மிகச்சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படைப்பில் வரும் அத்தனை பாத்திரங்கள் - சூழல்களின் பொறுப்பை படைப்பாளியே ஏற்க வேண்டும். எனது விவாதம் இப்பொழுது படைப்பாளியை பற்றியதே. கருத்துக்கள் மீதான சரியான புரிதல் வேண்டும். எங்கள் போராட்டம் பற்றிய உண்மை நிலை என்ன? உதாரணத்துக்கு சொல்கிறேன். இந்த படத்தில் காட்டப்பட்ட குழந்தை போராளிகள் உங்கள் காட்சிக்காக வடிவமைத்த ஒரு விஷயம். எங்கள் போராட்டம் மீது எப்படிப்பட்ட ஒரு கறையை பூசியது உங்களுக்கு தெரியுமா?

Suhansid Srikanth
:: அந்த காட்சி குழந்தைகளும் இந்த யுத்தத்தால் தீவிரவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை உணரவைக்கவே! அமுதா தன் சக வயது பெண்கள் வேறொரு தளத்தில் இருப்பதை கண்டு மிரட்சி கொள்வதை காட்டுவதற்கான கருவி தான் அக்காட்சி!
  
Steephan Sansigan
:: அது தான் ஏன்? என்கிறேன். அந்த ஒரு காட்சியில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த படம் வந்த பிறகு எத்தனை சிறுவர் அமைப்புகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தன தெரியுமா? ( குறிப்பு - 21 வயதிற்கு கீழ்ப்பட்ட எவரும் யுத்தத்தில் பங்கு பெறவோ அல்லது பலவந்தமாக இணைப்பதோ சர்வதேச யுத்த விதிகளுக்கு முரணானது )

Suhansid Srikanth :: அப்படி என்றால் இலங்கையில் குழந்தைகள் யாருமே யுத்தத்திற்கு தயார் செய்யப்படவில்லையா?

Steephan Sansigan :: //அப்படி என்றால் இலங்கையில் குழந்தைகள் யாருமே யுத்தத்திற்கு தயார் செய்யப்படவில்லையா?// மன்னிக்கவும் இதற்க்கு மேல் தொடர எனக்கு விருப்பம் இல்லை..

Suhansid Srikanth :: "அந்த ஒரு காட்சியில் எந்த வித உண்மையும் இல்லை." என்று நீங்கள் சொன்னீர்கள். அதற்கான கேள்வியே நான் கேட்டேன். அதில் என்ன தவறு? அந்த காட்சியின் அமைப்பு பிழை என்றால் - குழந்தைகள் அங்கே பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மை என்று சொல்வது போல் உள்ளது. அதைத்தான் கேட்டேன்.. தொடர விரும்பவில்லை என்ற பதில் எந்த நோக்கத்தில் வந்தது என்று புரியவில்லை.
 
Maheshkumar Janakiraman
:: Please read Baradwaj Rangan's "Conversation with ManiRatnam" : He answered all questions posed above, Kannathil muthamittal is never meant to show about tigers, Its about the girl and her views only .. Also If he had shown what is really happening in Srilanka, movie would have never got released, which is unfortunate, and thats the way politics is here

Suhansid Srikanth :: Conversations with ManiRatnam புத்தகத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் படித்த யாரும் மணிரத்னம் மீது அபத்த விமர்சனங்களை சுமத்த மாட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

Maheshkumar Janakiraman
:: Very good book Aspiring film makers must read.. He tells so many things about cinema and techniques ....

Omar Sheriff
:: சரி கடைசியா ஒரு விஷயம். அது குழந்தையின் பார்வையாகவே இருக்கட்டும்... அந்த நடிப்பு ஒரு குழந்தையுடைய இயல்பான நடிப்பாகவா இருக்கு? இல்லை! 25 வயது குழந்தையுடையதாக இருக்கு.

Suhansid Srikanth :: சினிமா என்பது டாகுமெண்டரி அல்லவே! மிகைப்படுத்தல் இல்லாவிட்டால் அது சினிமாவே இல்லையே!

Sreejith Bhaskaran
:: "CHILDREN OF HEAVEN"ல   ஏழு வயது குழந்தை அந்த பையனின் தங்கைக்கு ஷூ வாங்கித்தரும் அளவிற்கு அறிவோட இருக்குது என்றால், ஒரு 9 வயது சிறுமி கன்னத்தில் முத்தமிட்டாலில் தன அம்மாவை தேடி போற நடிப்பு இயல்பு தான்..

Saran Kumar :: எனக்கு தெரிந்து சுஜாதா திரைமொழி தெரிந்தவர், அதனால் தான் அவரால் தமிழ் சினிமாவில் மரியாதையுடன் இருக்க முடிந்தது. அவர் எந்த நேரத்திலும் இயக்குநரை  தான் முந்தி செல்ல வேண்டும் என்று நினைப்பத்தில்லை, ஜெயமோகனிடம் இந்த பக்குவம் இருப்பதாக தெரியவில்லை. எஸ்.ரா விடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன் .

Kaarthik Mani :: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நடை எழுத்துழகில் மிகவும் பிரபலம். வாசிப்பதற்கு மனதில் ஆழமாக பதியும் மற்றும் தண்ணீர் போன்ற நடை. ஆனால் இவரை யாரும் சரிவர பயன்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. இவரை 'சண்டக்கோழி'  படத்தில் வசனம் எழுத வைத்தால் எழுத்தாளரின் இன்றைய நிலை ???

Omar Sheriff :: எஸ்.ராவையும் சுஜாதா போன்றே தமிழ் சினிமா "உபயோகப்படுத்திக்" கொள்கிறது. உலகத்தரமான படைப்பாளி எஸ்.ரா. தமிழ் சினிமா அவரை பயன்படுத்தும் விதத்தை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது.

Suhansid Srikanth :: எஸ்.ரா திரை மொழியில் என்ன சாதித்து விட்டார்? ஜெயமோகனின் அங்காடி தெரு, நான் கடவுள், 6 மெழுகுவர்த்திகள், நீர்ப்பறவை எல்லாம் தீவிர சினிமா மொழியில் இருந்ததே! (படத்தின் வெற்றி, தரம் பற்றி நான் பேசவில்லை. அதில் எழுத்தாளனின் பங்கை மட்டும் சொல்கிறேன்) : அவர் முழுக்கதை எழுதிய "கடல்", கதை, திரைக்கதை, வசனம் என மூன்றும் செய்த "ஒழிமுறி" பிரமாதமாகவே இருந்தது. எஸ்.ரா என்ன செய்தார்?

AravindhKumar Sachidanandam :: புது எழுத்தாளர்களை பத்திரிக்கைகளும், பதிப்பகங்களும் ஊக்குவிப்பதில்லை என்பது ஒரு காரணம். எழுத்தாளர்களின் தேவையை உணர்ந்த இயக்குநர்கள் இங்கே மிக மிக குறைவு என்பது இன்னொரு காரணம்.

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ஜெயமோகனின் எழுத்தில் அவ்வளவு பிடிப்பில்லை எனக்கு.. ஆனால்.. எஸ் ரா.. மிகையில்லாத பதிவுகளுக்கு சொந்தக்காரர்.. எஸ் ராவின் கருத்தாளம் யதார்த்தம் ஊறியவை..

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: தவிர தமிழ் சினிமா நம் எழுத்துலகை முழுமையாய் உள் ஈர்க்க தயாரில்லை.. இடம்  கொடுக்காமல் எப்படி அவர்கள் தம் கைவண்ணத்தை காட்ட இயலும்? அவர்களின் படைப்புகளை திரைக்காவியம் ஆக்கினாலே விருதுகள் குவியும்! ஆனால் யார் தயாராக இருக்கிறீர்கள் ?

Suhansid Srikanth :: "கடல்" - ஜெயமோகன் முதலில் குறுநாவலாக எழுதிய கதையே! ஜெயமோகன் படைப்பில் பிடிப்பில்லை என்று சொல்லிவிட்டீர்கள்! இனி அவரைப்பற்றி பேச ஒன்றும் இல்லை. எனதளவில் அவரே தமிழின் தற்கால முதன்மை எழுத்தாளர்! எஸ்.ரா என்னை ஈர்த்ததில்லை. ஆன்மாவை தொடும் எழுத்து ஜெயமோகன் படைப்பது! அந்த உலகத்தில் பயணிக்க அவரது எழுத்துகளை, ஆளுமையை பயில வேண்டும்!

Suhansid Srikanth :: ஆமாம்.. ஒரு நாள் தெரியும்! அதற்கென்ன?

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ஜெமோ.. ஒரு பெரிய விஷயத்தை கருவாக கொண்டுவிட்டு அது பற்றி மெல்லியதான, முரண்பாடான தீர்வை கொடுப்பார்.. ஆனால் எஸ்.ரா.. சமூகத்தில் புளுதி படிந்து கிடக்கும் மெல்லிய யதார்தத்தை பதிவு செய்து தெளிவான சிந்தனையை தூண்டும் முடிவை, கவித்துவமாய் கொடுக்கக்கூடியவர்.

Suhansid Srikanth :: ஜெயமோகனின் எழுத்து உங்கள் சிந்தனையை தூண்டவில்லை என்பது போல், எஸ்.ரா எழுத்து என்னை சிந்திக்க செய்வதில்லை. இது அவரவர் ரசனையை பொறுத்ததே!

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ஏற்கிறேன் ஜெ.மோவை ரசிக்கிறேன்.. கற்று கொள்கிறேன்.. சிந்திக்கிறேன்.. ஆனால் முடிவெடுக்க முடிவதில்லை.. ஆனால்.. எஸ்.ரா - எனக்கு புதுமைகளை கற்றுத்தருகிறார்.. # சிந்தனை பலவிதம் தான் #

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: மணிரத்னத்தை விமர்சிக்க கொஞ்சம் மேலான அறிவு வேணும் என்ற கருத்தில் நானும் உடன் படுகிறேன்.. ஆனால்.. சில இடங்களில் மணிரத்னத்தின் ஒரு வித சாய்வு அல்லது தடுமாற்றம் நம்மை புரியாத திசைகளில் தள்ளிவிடுவதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாரா?

Suhansid Srikanth :: நண்பரே! அவரது சாய்வோ, தடுமாற்றமோ என்னை ஒருபொழுதும் குழப்பியதில்லை. அவரது படங்களில் பிழைகள் நிகழும். ஒப்புக்கொள்கிறேன்! அதைத்தாண்டி ரசிப்பதற்கு ஆயிரம் விஷயங்களும் இருக்கும். நான் (ManiRatnam) படம் பார்க்கும் போது இங்குள்ள பலரை போல் nativity, geography, அரசியல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பூதக்கண்ணாடி வைத்து தேட மாட்டேன். அவை அவசியமே! ஆனால் ஒரு சில விழுக்காடுகள் முரண்படலாம். எத்தனையோ உலக படங்கள் அரசியல் பிழைகள் அல்ல பிறழ்வுகளுடன் வந்துள்ளன. அவை செவ்வியல் படைப்புகளாக மாறியும் உள்ளன. இதை ஒரு "cinematic liberty" என்றே நான் பார்க்கிறேன்.

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ம்ம்.. ஒரு விதத்தில் என் சிந்தனைக்கு அவை காட்சி பிழைகளாக தெரியலாம்.. ஆயினும் என்னை பொறுத்த வரை மணிரத்னத்தின் படைப்புக்களை முழுமையான ஒரு படைப்பாக உணர முடிவதில்லை.. ஆனால் உணர முயற்சிப்பது உண்டு.. (உங்கள் கருத்தையும் மனம் கொள்கிறேன் )

Suhansid Srikanth :: அவர் செய்வதும் வணிக சினிமாவே! அதில் முடிந்தவரை ரசிகனை முட்டாளாக்காமல் செயல்படுகிறார். ஒரு சாதாரண வணிக இயக்குனர் எடுக்க தயங்கும் களங்களில் கதை உருவாக்குகிறார். அதுவே நான் ரசிக்கும் விஷயம்! அவர் வணிக சமரசம் இன்றி செய்த இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் கூட படைப்பாக தெரியவில்லையா?

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: கன்னத்தில் முத்தமிட்டால் கதை நடக்கும் நிலத்தில் நேரடியாக வசிப்பவன் என்ற ரீதியில் கன்னத்தில் முத்தமிட்டாலை விமர்சிக்கும் உரிமையுள்ளவன் ஆகிறேன்.. என்னை பொறுத்தவரை அந்த படம் ஒரு நல்ல முயற்சி. ஆனால் முழுவதுமாய் எங்கள் தேசத்து உண்மை பதிவு செய்யப்படவில்லை.. அனால் அதை வணிகம் என்று சொல்ல மாட்டேன்!

Tuesday 1 October 2013

மணிரத்னம் எதிர்ப்பின் பின்னணி என்ன?

மணிரத்னத்தின் ராவணன் - கடல் :: இந்த படங்களை "மொக்கை" - "முடியல.." என்ற ரீதியில் ஊரெல்லாம் கேலி செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.. முன்பெல்லாம் அவர்களோடு விவாதிப்பேன்.. இப்போது அது எனக்கு சற்றே பழகி விட்டது..

ஆனால் திரைப்படக் காதலர்கள் என்ற குழுமத்தில் கூடவா ஒருவருக்கும் அந்த படங்கள் சொல்ல வந்தது புரியவில்லை.. நோலனை - டொரெண்டினொவை அங்குலம் அங்குலமாக அணுகும் மக்கள் சூழ் இடமான இங்கே யாருக்கும் இந்த முயற்சிகள் பிடிக்கவில்லையா?

ஒரே விதமான கதை சொல்லல் முறை - பாத்திர படைப்புகள் கொண்ட பாலாவை கொண்டாடி தினமும் இரண்டு பதிவாவது இங்கு பார்க்கிறேன்.. நேற்று ஒரு நீண்ட விவாதத்தில் "மணிரத்னம் ரோஜாவோடு தொலைந்து விட்டார்.. அவருக்கு ஆழமாக கதை சொல்ல தெரியாது.. பீல்டு அவுட்" என்ற ரீதியில் பலரது கமெண்ட் விழுந்தது.. மிஷ்கினை தூக்கிப்பிடிப்பவர்கள் கூட *மணிரத்னமா? அவர் தொண்ணூறுகளிலேயே தங்கி விட்டார் *என்று பேசினார்கள். மிகவும் நொந்து போன விஷயம்..

"மணிரத்னம், வைரமுத்து மாதிரி சாதிச்சவங்க இந்திய.. ஏன் ஆசிய சினிமால யாரு? அவங்கள நாம கொண்டாடுறோமா? கிடையாது. சத்தியமா கிடையாது" என்று செல்வராகவன் "இரண்டாம் உலகம்" இசை வெளியீட்டு விழாவில் காட்டமாக பேசியதன் மனவேதனை இப்போது புரிகிறது.

நமது கலாசாரத்தில் உலகத்தர சினிமாவை படைக்கும் ஒருவரை நிராகரித்து விட்டா நீங்கள் நோலனையும், இன்ன பிறரையும் கொண்டாடுகிறீர்கள்? புரியவே இல்லை!