Thursday 14 August 2014

குருநாத் தேசிகன்!

"நீங்க சொல்லி தள்ளிட்டீங்க நான் சட்டத்துக்கு கட்டுப்படாதவன்னு. நாப்பது வருஷத்துக்கு முன்னால இன்னொருத்தர் இருந்தாரு. அவரும் அப்போ சட்ட்டத்துக்கு கட்டுப்படாதவர் தான். இன்னிக்கி நம்ம அவர மகாத்மான்னு கூப்டுறோம். அவரோட காலத்துல, நாட்டுல எல்லாரும் அடிமையா கெடந்தோம். அப்போ அவரு புது சட்டத்த எழுதுனாரு. நம்ம விடுதலைக்காக. நான் மகாத்மா இல்ல சாமி. எனக்கு வியாபாரம் செய்யதான் தெரியும். உழைக்க தெரியும். வறுமை நல்லா தெரியும்.

ரெண்டே சட்டை, என் பொண்டாட்டி, ஒரு மச்சான்காரனோட பம்பாய் வந்தேன். மனசுல வெறி business பண்ணனும்னு. ஆனா இங்க வந்து முட்டி மோதுனதுக்கு அப்புறம் தான் தெரியுது எல்லா கதவையும் அடைச்சிட்டாங்கனு. அது தொறந்துதுனா அது பணக்காரங்களுக்கு மட்டும்தான் தொறக்கும். எல்லாம் சர்க்காரோட கதவு. உங்கள மாதிரி பட்டவங்க உருவாக்குனது. ஒன்னு ஓங்கி மிதிச்சா தொறந்தது. இல்லைனா சலாம் போட்டா தொறந்தது. நான் ரெண்டையும் பண்ணேன். எங்க ஓங்கி மிதிக்கணுமோ, அங்க மிதிச்சேன். எங்க சலாம் போடுன்னீங்களோ, 'வச்சுக்கையா சலாம்'னு போட்டேன். இன்னிக்கி என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. ஏன் இப்படி எட்டி உதைக்கிறான், साला! எதுக்கு சலாம் போடுறான்னு?

என்ன பண்ணிட்டேன்னு உங்களுக்கு இவ்ளோ கோபம் இப்போ?நான் முன்னுக்கு வந்துட்டேன்னா? இல்ல, வேகமா முன்னேறிட்டு இருக்கேன்னா? இல்ல, ஒரு சாதாரண கிராமத்தான் இப்படி பெருசா வளர்ந்துட்டு போயிட்டே இருக்கான்னு உங்களுக்கு எல்லாம் கோபமா?

நீங்க குத்தி காட்டுறீங்களே என் மேல. எது? இந்த exercise, customs.. அந்த tax, இந்த tax.. எல்லாம் குளறுபடின்னு. நான் தொழில் ஆரம்பிச்ச புதுசுல இந்த வார்த்தைக்கெல்லாம் என்ன அர்த்தம்னு எனக்கே தெரியாதுய்யா. படிப்படியா விழுந்து, முட்டித்தேய மேல வந்துருக்கேன். நாலு காசு மிச்சப்படுத்துறதுக்காக பைத்தோன்லேர்ந்து பம்பாய சுத்தி 25 km நடப்பேன். பெரிய பெரிய kerosene முட்டைகள முதுகுல தூக்கிட்டு.
                                        


பணத்தோட மதிப்பு என்னனு எனக்கும் நல்லாவே தெரியும். எங்க எல்லாம் சம்பாதிக்க வழி இருந்துச்சோ, அங்க எல்லாம் தேடி போய் சம்பாதிச்சேன். எனக்காக மட்டும் இல்ல. நம்பி இருக்குற 30 லட்சம் share-holdersகாகவும் தான்.

எனக்கு இந்த golf விளையாட்டுனா என்னனு தெரியாது. இந்த குதிரை raceக்கு எல்லாம் போக தெரியாது. ஆனா என்னோட businessல யாரும் என்னை அடிச்சுக்க முடியாது. Polyester எனக்கு நல்லா பண்ண தெரியும். Fibres, Chemicals.. அதுவும் A1 Qualityலங்க, இருக்குறதுலயே கம்மியான விலைல தயாரிக்கிறேன். இதான் நான் செஞ்ச குத்தமா? இதுக்கு தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமா?

Petrol bunkல attendantஆ இருந்துருக்கேன். டப்பாவ தூக்கிட்டு ஊரெல்லாம் அலைஞ்சிருக்கேன். எப்படி நம்ம நாடு world bank கிட்ட கையேந்திட்டு அலையுதோ பணம் குடுங்க குடுங்க நாங்க road போடணும்னு. ஏன் நம்ம தலைவிதிய நாம மாத்த கூடாதா? நம்மளோட, நம்ம தேசத்தோட. என்னைய இப்பவும் அதே மாதிரி டப்பாவ தூக்கிட்டு அலைய சொல்றீங்களா? நம்ம நாடு என்னிக்கும், இப்படியே கையேந்திக்கிட்டே இருக்கணுமா? ஏன் நாம முன்னுக்கு வரக்கூடாதா? நமக்கு ஏன் இன்னும் ஏழை நாடுனே பட்டம்? எல்லாரையும் தள்ளிக்கிட்டு நம்ம நாடு முதல் நாடா வர முடியாதுனு எங்கயாச்சும் எழுதி வச்சுருக்கா? நிச்சயம் வர முடியும். அங்க தான் வரேன். அந்த top வரேன்.

இந்த நிலைமைக்கு வர்றதுக்காக நான் எத்தனையோ இழந்துருக்கேன்ங்க. இந்த கையும் போச்சு. தண்டமா தொங்குது சனியன். உங்க பெரிய enquiry முடியுறதுக்குள்ள இன்னும் நான் என்னென்ன இழக்க போறேன்னு எனக்கே தெரியல. என்னோட புத்தி. என் குரல். ஆனா ஒன்னு மட்டும் என்கிட்டேர்ந்து நீங்க எல்லாம் பறிச்சிடவே முடியாது. அது என்னோட தைரியம். அத நான் இழக்க மாட்டேன். ஏன்னா என்னோட தைரியம், இங்க இருக்குற சாதாரண குடிமக்களுக்கு இருக்குற தைரியம். இந்த தேசத்தோட தைரியம்.
நீங்க எல்லாம் கூட்டு சேர்ந்துட்டு என்னை நிறுத்த பாக்குறீங்கல? நான் இங்க தனி மனுஷன் இல்ல. என் கூட சேர்ந்து முழு தேசமும் முன்னேறிட்டு இருக்கு. இந்த நாட்ட நிறுத்துறதுக்கான சக்தி உங்க யார் கிட்டயும் கிடையாது. அது உங்க சட்டத்தாலயும் முடியாது.

எந்த கதவுகள எல்லாம் மூடணும்னு நெனச்சிங்களோ அத எல்லாம் இப்போ தொறந்து போட்டாச்சு. நாங்க எல்லாரும் எப்பவோ உள்ள அடியெடுத்து வச்சிட்டோம். இப்ப யாரனு வெளிய தள்ள போறீங்க நீங்க? அய்யா! இந்த தேசத்தோட வளர்ச்சிய சோதிக்க என்ன மாதிரி enquiry அமைக்க போறீங்க? எங்க வளர்ச்சிய எந்த enquiryயால நிறுத்த முடியும் சொல்லுங்க!

அஞ்சு நிமிஷம் time கொடுத்தீங்கல்ல எனக்கு. நாலரை நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன். முப்பது second profit. லாபம். இதுதாங்க என் business. இப்போ இதுக்காகவும் சேர்த்து நீங்க தண்டனை தரணும்னு நினைச்சிங்கன்னா, தாங்க!

குருநாத் தேசிகன் தண்டனைக்கு பயந்தவன் இல்ல."

Thursday 24 April 2014

விண்ணைத்தாண்டி வருவாயா?


When a film conversation get so much reality in your life.. That's the moment you start falling in love with the film.

GVM - Jessy - Karthik - Chinmayi - Rahman _/\_ —  feeling "Will you cross skies for me?"
.                        

"ஏன் வந்த Karthik?"

"என்ன இது SMS?"

"நீ அங்க இருக்குறதால தான் நான் அந்த SMS அனுப்பிச்சேன்.

நீ திடீர்னு வரமுடியாதுன்னு நெனச்சேன்.

உன் கூட பேசி என்னால புரியவைக்க முடியாது Karthik!

உன் கூட என்னால பேச முடியாது Karthik."

"நான் இப்போ வந்துட்டேன்ல..

இப்போ சொல்லு..

என்ன பண்ணனும்னு சொல்லு.

எங்க போணும்னு சொல்லு.

இல்ல என்ன பிரச்சனைனாது சொல்லேன்!"

"நான் தான் உன் பிரச்சனை Karthik.

நான் வரேன்னு தப்பான timeல சொல்லிட்டேன்ல.. உன்னால ஒன்னும் பண்ண முடியலேல. ஒரு பத்து நிமிஷமாவது என்ன பண்றது? இது முடியுமான்னு நீ யோசிச்சிருப்பேல?

அது இருக்ககூடாது Karthik. என்னால உனக்கு எந்த கஷ்டமும் இருக்க கூடாது.

இது எப்பவுமே இப்படி தான் இருக்கும்னு தெரியுது எனக்கு.

அன்னிக்கு வரணும்னு தான் தோணுச்சி. ஆனா அந்த ஒரு நொடி போயிடுச்சி Karthik. That moment is gone. இன்னிக்கு இத விட்டுரலாம்னு தோணுது.

இல்ல.. sureஆ சொல்றேன். இது முடிஞ்சி போச்சு Karthik.

நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன். நீ இத பெரிய விஷயமாவே எடுத்துக்கல. I did fall in love with you.

ஆனா நான் வேண்டாம்னு சொன்னேன்ல?

நீ என் பின்னால சுத்தலேனா.. நான் என் பாட்டுக்கு சும்மா உட்கார்ந்துருப்பேன். அவர் சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கயாது போயிருப்பேன்!

நீ ஏன் பிடிச்சிருக்குனு சொன்ன?

ஏன் கேரளாக்கு வந்து sorry சொன்ன?

ஏன் trainல என்னை kiss பண்ண?

என் கல்யாணத்தப்போ ஏன் churchல வந்து உட்கார்ந்த?

ஏன் என்னை விரட்டி விரட்டி love பண்ண Karthik?

இந்த ஆறு மாசம் என் கூட எப்படி எல்லாம்!

இது பிரச்சனைன்னு உனக்கு தெரியும்ல? அப்புறம் ஏன்?

இது peacefulஆ இல்ல.. அதனால இது வேண்டாம் Karthik.

மறந்துரு. நானும் மறந்துடுறேன்.."

"பைத்தியமா உனக்கு! இப்போ என்னாச்சுன்னு இந்த முடிவு? ஒண்ணுமே நடக்கலையே!

எவ்ளோ நாள் ஆனாலும் wait பண்றேன் Jessy.

உனக்கு 50 வயசு ஆகும்போது ஒத்துப்பாரா? சொல்லு Jessy. நான் wait பண்றேன். அப்போ எனக்கு 49 வயசு ஆகும். அதுவரைக்கும் நான் wait பண்றேன்.

அப்பப்போ நான் உன்ன பாத்துக்குறேன். என்னை meet பண்ண வருவேல? அது போதும்!"

"அதனால தான் அது வேண்டாம்னு சொல்றேன் Karthik! நீ ஏன் wait பண்ணனும் Karthik? You have things to do!"

"I will decide that. நீ எனக்கு decide பண்ணாத."

"அவங்க என்னை வெறுக்குறத விட நீ என்னை வெறுக்கிறது betterனு நினைக்கிறேன்.

விட்டுடு Karthik. என்னை விட்டுடு please."

"You don't mean that Jessy!"

"சத்தியமா சொல்றேன் என்னை விட்டுடு Karthik. இது நடக்காது."

"Jessy! உன்ன விடவே முடியாது Jessy. உங்க அப்பா அண்ணன் தான... அவன.. அவங்க கிட்ட நான் பேசிக்குறேன்."

"அசிங்கமாகிட போகுது Karthik, அதுக்கு முன்னாடி இங்கேயிருந்து போயிடு.."

"சத்தியமா உனக்கு ஏதோ ஆயிடுச்சி! Why are you doing this Jessy?"

"நான் இப்படி தான் Karthik.

எனக்கு என்னையே தெரியாது Karthik. எனக்கு என்ன வேணும்னு எனக்கே தெரியாது.

வலி எனக்கு ரொம்ப பிடிக்கும் Karthik. இந்த வலி எனக்கு பிடிச்சிருக்கு."

"Jessy.."

"வேற எவ்வளவோ பொண்ணுங்க இருக்காங்க! நீ ஏன் என்னைய love பண்ண Karthik?

அப்படி நான் என்ன பண்ணேன்! உன்ன தாண்டி போனேன். அவ்ளோ தான?

And you know what? எனக்கு Cinemaவே பாக்க பிடிக்காது! அந்த இருட்டு. ஒரே கூட்டம். சத்தம்.

And நீ படம் எடுக்கபோறேன்னு வந்துட்ட!

Set ஆவாது Karthik! உனக்கும் எனக்கும் set ஆவாது!"

Sunday 23 March 2014

பாவம்டா பாவம்!

An advice for Life time..

Sharing one best scene written by Selvaraghavan, from 7g. Best ever example for telling how influencing a female character can be etched in a story!, How a woman can hold back you in your life.. ANITHA - Definitely comes under 10 best female characters ever played in Tamil Cinema.


                               
                               
"வேல கெடைச்சிடுச்சா?"

"ம்.."

"ம். ஏது இந்த ஐநூறு ரூபா?"

"வீட்லேர்ந்து தான் எடுத்துட்டு வந்தேன்.
பின்ன? பசங்க treat கேப்பானுங்கள்ல?"

"ஹாங்... வேலை கெடைச்சிடுச்சினு உங்க வீட்ல சொல்லிட்டியா?"

"இல்ல.."

"ஏன்?"

"உனக்கு எங்க வீட்ட பத்தி தெரியாது அனிதா.
விட்ரு.
மொதல உன்கிட்ட சொல்லிருக்கணும். பசங்க கூப்டாங்கலேனு.." 

"எதுக்கு உங்க வீட்ல சொல்லல?"

"அதபத்தி பேச வேணாம்னு சொல்றேன்ல."

"அதான் ஏன்?"

"அந்த ஆள் என்னை எத்தன வாட்டி நாய் அடிக்குற மாதிரி அடிச்சிருக்கான் தெரியுமா?
*** இத சொன்னா வேற ஏதாவது திட்டுவான்.
அவனுக்கு நான் நல்லா இருந்தாலே பிடிக்காது."

"ம்.. So?"

"தனியா ஒரு flat பாக்க சொல்லியிருக்கேன்.
மொத மாச சம்பளம் வந்ததுமே shift ஆயிடுவேன்."

"ஏன் இதுக்கு முன்னாடி shift ஆகல?
ஏன்னா முடியாது.. வெளில போனா பிச்ச தான் எடுக்கணும். correct?

உங்களுக்கு எல்லாம் ஒரு நெலமைக்கு வர்ற வரைக்கும் parents வேணும்.
அப்புறம்.. விட்டுட்டு போய்டுவீங்க..
கேட்டா.. எங்க அப்பா திட்டுறாரு.. அடிக்குறாரு.

எப்பவுமே உன்ன பத்தியே யோசிச்சிட்டு இருக்கியே.. என்னைக்காவது உங்க அப்பா பத்தி யோசிச்சு பாத்துருக்கியா?

ஒரு கவலையும் இல்லாம சுத்திட்டுருக்க உனக்கே இவ்ளோ கோபம் வருதே.. எல்லா problemதையும் சமாளிக்குறாரே.. அவருக்கு எவ்வளவு கோபம் வரும்! அந்த கோபத்துல ரெண்டு வார்த்த திட்டுனா.. அடிச்சா.. என்ன இப்போ? கொறைஞ்சா போயிருவ? அப்பா தான?

அன்னிக்கி என் கைல அடி வாங்குன.. ஹ?

ஒரு பொண்ணு செருப்பால அடிச்சா கூட தாங்கிக்கிடுவீங்க. சொந்த அப்பா அடிச்சா மட்டும் தாங்கிக்க மாட்டிங்க. ஹ்ம்..

பாவம்டா பாவம்.. துரத்தி துரத்தி அடிக்கும்..

ஒருத்தர் இருக்கும் போது அவரோட அருமை தெரியாது. போனதுக்கு அப்புறம் தான் புரியும்.

சொந்த அப்பாவையே அவன் இவன்ங்றியே.. அந்த வாய்க்குள்ள acid ஊத்தணும்!

இந்த மாதிரி thoughtsசோட ஒரு second கூட என்கிட்ட வராத!

Ok?"

Wednesday 19 March 2014

Naan Raatchasanlaa..

I haven't posted any scene split-ups about Raavanan till date. When a friend asked something to share from that film, I decided to write about my favorite scene in the film. Scene where everything literally gets clear in the plot.

There is an epic touch in the scene with Ragini being tied in a tree like how Seetha was caged under a tree in Ashokavanam.

Throughout the scene there are many subtle moments like Ragini holding the life saving rope when Veera looks down a deep valley, Veera blindfolding Ragini at the very end of the scene (which indicates how the character graph of Ragini with Veera ends the same way like it began.), Cues of A.R. Rahman - so serene, pure as Veera's love for the abducted gelling well with the location which is nothing but nature, Santosh Sivan's signature skin tones (almost all shots with Ragini holding the gun.. particularly one when focus changes between her face and her hand with the gun.), Suhasini's dialogues for Veera when he gives Ragini two options, to shoot either in his head to smash his brain or at his chest to crash his heart.
                                 


"அவர எங்க? என்னாச்சி?"

"அவரு மட்டும் ஸ்ரீ ராமரு.
நாங்க எல்லாம் பத்து தல ராவணன் இல்ல?"

"அவருக்கு ஒன்னும் ஆகலையே?
இதுக்கு மேல கெஞ்ச முடியாது.
பதில் சொல்லுங்க.
சொல்லுங்க."

"இத பிடிங்க. "

(gives his gun. She blinks. He forcibly puts it in her hand.)
"உயிரோட தான இருக்காரு?"

(Veera smiles.)
"கடைசியா பார்த்தப்போ திடமா போஸாக்க இருந்தாரு.
பாலத்துல தொங்கிட்டு கெடந்தாரு.
ஒத்தக்கையில..
ம்ம்ம்..
கோவமா..
வீரமா..
ஹீரோ மாதிரி.

பலமா புடிங்கன..
விட்டுற கிட்டுற போறீக..
உங்க S.P எங்க கெடக்காருனு எட்டி பாத்துட்டு சொல்லுதேன்.

(Ragini ties the rope of Veera in the tree where he has tied her.)

டன்.. டன்.. டன்..
எங்க? எங்க? எங்க?
S.P!
தா.. அந்தா கெடக்காருலா S.P!.

நம்ப மாட்டீய.. பாம்பு மாதிரிலா மேல ஊர்ந்து வந்துட்டுருக்காக.

S.P!! ஓய்!"

"எனக்காக ஒன்னு செய்வீங்களா?"

"சாமி தான் வரம் கொடுக்கும். நான் ராட்சசன்லா?"

(that typical self declaration of their evilness one can easily get from ManiRatnam's chaotic characters. In Inba, Bergmans milieu..)

"என் புருசன கொன்னுடாதீங்க."

"மேல வந்தேனா ஒத்தைக்கு ஒத்த.."

"என்னால இந்த கயிற விட்டுட முடியும்."

"ஒரு மிருகம் தான் உசுரோட மிஞ்சும்."

"இல்ல இதால சுட்டுட முடியும்."

"நீங்க யார் மேல பந்தயம்.."

(before completing it, He stands stunned with this unexpected statement from Ragini. One of the best reactions Vikram has given till date comes now. <After Sethu & Pidhamagan, Raavanan is where I lost myself in the character played by Vikram. He is so lively, dynamic and chaotic as Veera.>)

"நான் என்ன உங்க கைல தோட்டாவோட துப்பாக்கி கொடுப்பேன்னு நெனச்சீகளோ?"

(She see the gun for a second and triggers it. <BOOM>)


"என்ன கொல்ல பிறந்த பெரிய ஆசாமி யாருடேனு இவ்வளோ வருசமாலா தேடிட்டு கெடந்தேன்.

சுடுங்க.

இங்கன சுட்டா பத்தே நிமிஷம் தான்.
மனசுல இருக்குற கண்றாவி சஞ்சலம் வேதனை கூடவே உசுரும் போய்டும்!

ஆனா இங்க சுட்டா ஒரே நொடி.

நெனப்பு
பிரியம்
ஆச
மூச்சு.. எல்லாம் ஒண்ணா போய்டும்..

வலிக்காது.

உங்கள இப்படியே..
சந்தோஷமா பாத்துக்கிட்டே..
சிரிச்சுக்கிட்டே..
சரிஞ்சிருவேன்."

"நான் இங்க இருந்துட்டா அவர விட்டுருவீங்களா?"

(The most crucial moment in the film comes here. She just said that. That is what he was dying to hear.)

"இருப்பீகளா?"

(Veera comes closer. And she avoids his eye contact, well explaining their mental states.)

"நெசமாவே?"

(And then.. Veera blindfolds her.)

"என்ன செய்றீங்க?"

(One of the shots that struck with me when I came out of the theater. The scene ends with the second knot of Veera blindfolding her. <which can be a biggest surprise for long time followers of Mani Ratnam to see how he has evolved as a film-maker and narrator in a span of 30 years>)

P.S : Have read a tweet by some anonymous in twitter which goes like "That urge to watch Raavanan now. The world that the film tries to create, every one's effort towards it and particularly music is excellent."

Isn't that a damn truth?

IRUVAR Monologue..

In the memory of Faizel, sharing this epic monologue from Iruvar climax..
                                           


"என் அருந்தோழனே!
இதயத்து நண்பனே!
மாணிக்க மழையே!
மறைந்து விட்டாயா?

முன்னொரு பொழுதில்..
மீசை முளைக்கிற வயதில்..
ஒரிலையில் சோறுண்டோம்.
ஒரு பாயில் கண் வளர்ந்தோம்.

அந்த நினைவுகளின் கண்ணீரில், நெஞ்சுக்குழி நிறைகிறதே!

நம் கண்கள் வெவ்வேறு..
கனவுகள் ஒன்றுதான்!
நம் நெஞ்சம் வெவ்வேறு..
நினைவுகள் ஒன்றுதான்!
நம் கோட்டைகள் வெவ்வேறு..
கொள்கைகள் ஒன்றுதான்!

எதிலும் முந்தி வர துடிக்கும் முனைப்புள்ளவனே!
சாவிலும் என்னை முந்தி சரித்திரம் ஆயினாயோ?

என் வெற்றிக்கு மாலை தந்த கரம் எங்கே?
என் விழி நீரை சுண்டிவிட்ட விரல் எங்கே?
குழல் கொண்ட இசையாக கொஞ்சுகின்ற குரல் எங்கே?
என் முத்துவேல் வசனத்தை முத்தமிட்ட உதடு எங்கே?
என்னை ஊரெல்லாம் சுமந்து ஏற்றி வந்த தோள் எங்கே?

ஐயகோ!
இனி பார்க்கவே மாட்டாயா நண்பா?

எள்ளின் முனையளவும் இப்பொழுது கசப்பில்லை.
புல்லின் நுனியளவும் இப்பொழுது பகையில்லை.
மரணத்தை போல மனம் வெளுக்க மருந்தில்லை.

உன்னோடு ஒரு வார்த்தை பேசத்தான் நினைத்தேன்..
முடியவில்லை.

நலிந்து விட்ட உடல் வருடி நலம் கேட்க துடித்தேன்..
முடியவில்லை.

இன்று உன் ரோஜாப்பூ முகத்தில் முத்தமிட நினைக்கிறேன்.. முடியவில்லை.

முட்டி வரும் கண்ணீரை மூடிவிட நினைக்கிறேன்..
முடியவில்லை.

போய் வா நண்பா!
போய் வா!

உன் பக்கத்தில் எனக்கும் ஒரு படுக்கை விரித்து வை!
என்றேனும் ஒரு நாள் உன் அருகில் நான் வருவேன்.

இன்னொரு பொன்நேரம் என்னை தேடி வந்தால்..
காலம் ஒரு செங்கோலை என் கையில் தந்தால்..
உன் கனவும்..
என் கனவும்..
ஒரு பொழுதில் நிறைவேறும்.
உன் கல்லறையின் காதுகளில் நல்ல சேதி அரங்கேறும்!"

HAMEED FAIZAL..


நேற்று symposium work முடிந்து வந்து கொண்டிருந்த போது அங்கப்பனிடமிருந்து message வந்திருந்தது. Conversations folderஐ open செய்யாமல் பார்த்தபோது "Our friend Hameed Faizal.." மட்டும் தெரிந்தது. ஏதாவது National level அல்லது State level போட்டியில் ஜெயித்திருப்பான் என்று மிக மெதுவாக அந்த messageஐ படிக்க தொடங்கினேன்.. Faizal மரணம் அடைந்ததை தெரிவிக்கும் message ஆக அது இருக்கும் என்று நினைக்கவே இல்லை..

மரணம் என்பதை சற்றே பக்குவமாக அணுக நினைத்தாலும் இந்த மரணம் அப்படி எந்த தத்துவத்திலும் சேராது. காரணம் Faizal!! இந்த உலகில் சராசரியாக நான் பார்க்கும் நண்பர்களில் ஒருவனாக Faizal இல்லை. Angelic தன்மை மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு மனிதன் போல தான் Faizal பழகுவான்.

சில வருடங்கள் Faizalம், நானும் ஒன்றாக படித்திருக்கிறோம். பார்த்திருக்கிறேன்.. அத்தனை பழக்கம் இருந்ததில்லை என்றாலும் 5th, 6th படிக்கும் போது Hi, Hello அளவுக்கு பழக்கம் இருந்தது. அவன் 7th 'A'வில் படித்தான். உபயதுல்லாஹ், ஆறுமுக சிவஷங்கர், அங்கப்பன் தான் அவன் gang. அவர்களோடு தான் இருப்பான். அப்பப்போ போய் பேசியிருக்கிறேன். பின் திடீரென்று ஏதோ ஒரு சம்பவத்தில் எங்களுக்குள் முரண் ஏற்பட்டது. அதன் பின் சில நாட்கள் பேச்சு வார்த்தை இல்லை.

என்னிடம் இருக்கும் மிகப்பெரிய கெட்ட பழக்கத்தை சொல்ல சொன்னால் அது நெருக்கமானவர்களிடம் கோபப்பட்டு பேசாமல் இருப்பது தான். நான் கோபித்து கொள்ளவே இல்லையென்றால் அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருக்கமாட்டார்கள்.

ஒரு வாரத்திற்குள் அவனே வந்து பேசினான். "இனி எப்பொழுதும் நமக்குள் சண்டையே வராது. Okவா?" என்றான். நான் அதற்கு சரி - வேண்டாம் எதுவும் சொல்லவில்லை. பிறகு.. 8thல் நாங்கள் இருவரும் ஒரே sectionல் படித்தோம். எந்த விஷயத்துக்குமே அவனிடம் ஒரு புன்னகை இருந்தது. அதை செலவழிப்பதில் அவனுக்கு தயக்கமே இருந்ததில்லை. 'வால.. போல..' என்பதை தாண்டி 'மச்சான்..' என்று நண்பர்களை அழைக்கும் பழக்கமே எனக்கு அவனிடமிருந்து தான் வந்தது.

Monthly exams வந்த போது நாங்கள் இருவரும் சேர்ந்து G.K testகு படித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. Match the followingல் ஒரு கை வைத்து மறைத்து answers சொல்லி பார்த்துக்கொள்வோம்.

அப்போது தான் 'அந்நியன்' படம் release ஆகியிருந்தது. அதில் விக்ரம் அந்நியன் ஆக மாறியவுடன் கண்ணின் கருவிழியை 'டப்.. டப்..' என்று உருட்டுவதை அப்படியே செய்து காட்டுவான்.

அவன் கபடி player. ஒரு active sports-person. Play groundல் வைத்து எதற்காகவோ அவனை திட்டியதற்கு P.E.T சாரிடம் சொல்லி கொடுத்துவிட்டான். அதன் பின் பல மாதங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

9thல் 'Spell Bee' competitionல் Finalsகு முந்தைய சுற்று வரை சென்று eliminate ஆகிவிட்டேன். மிகவும் upset ஆக உட்கார்ந்திருந்தேன். வீடு வரை வந்து "இதுக்குலாம் mood out ஆகாத. இன்னும் lifeல எவ்ளவோ stage இருக்கு" என்று சொல்லிவிட்டு போனான். நினைவில் இருப்பது வரை அது தான் Faizal என்னிடம் நேரடியாக.. கடைசியாக பேசியது.

11th, 12th வேற schoolல் சேர்ந்ததால் ஓரளவுக்கு இங்கு இருந்த நண்பர்களுடன் touch இல்லை. Faizal உடன் சுத்தமாக contact இல்லை. நான்கு வருடங்கள் கழித்து Facebookல் பேசினான். அவன் MITயில் சேர்ந்திருந்தான். நண்பனுடன் சேர்ந்து Shopping website (http://www.happyshoppie.in/) ஒன்று தொடங்கியிருப்பதாகவும், அதை பார்த்து பிடித்திருந்தால் share செய்யவும் சொன்னான். நான் "இத்தனை வருஷம் கழிச்சு பேசுற.. இவ்ளோ professionalலா தான் பேசுவியா?"னு கேட்டேன். இதே கேள்வியை நேரில் கேட்டிருந்தால் புன்னகை. இப்பொழுது ஒரு smiley அனுப்பினான். அந்த site நான் இன்றுவரை share செய்யவே இல்லை. அதன் பிறகு அவனிடமிருந்து Friendship day wishesம், என்னிடமிருந்து Ramzan wishesம் மட்டும் சொல்லிக்கொள்ளப்பட்டது.

அவனுக்கு ஒருமுறையாவது call பண்ண வேண்டும் என்று பல தடவை நினைப்பேன். பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று அது தள்ளி தள்ளி போனது. சில மாதங்கள் முன் school சென்றபோது பத்மா மிஸ் "Faizal எப்பிடிடா இருக்கிறான்" என்று என்னிடம் கேட்டது தான் அவனை பற்றி நான் யோசித்த கடைசி தருணமாக இருக்க வேண்டும்.

நேற்று மதியம் தான் 'Hesistationனாலோ, egoவினாலோ யாரிடம் கோபப்பட்டிருந்தாலும் மனதுக்கு பிடித்திருந்தால் நாமாக சென்று பேசிவிட வேண்டும்' என்று ஒரு வாதத்தில் பேச்சை நிறுத்தி பல மாதம் கழித்து நான் sorry கேட்ட ஒரு தோழியிடம் சொல்லியிருந்தேன். இனி எப்பொழுதுமே மன்னிப்போ, புன்னகையோ, 'மச்சான்..' என்று அழைப்போ தர Faizal இல்லை.. 
                                                      

சில நண்பர்கள் எத்தனை விலகி இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், எத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாலும் அவர்கள் மேல் இருக்கும் பிரியம் குறைவதே இல்லை. அப்படி ஒரு நண்பனாக தான் இருந்தான். அவனிடம் பழகத்தொடங்கிய நாள் முதல் இன்று வரை யோசித்தாலும் ஒரு குறை கூட அவனிடம் தெரியவில்லை.அவனது மொத்த வாழ்க்கையிலுமே எதிரிகள் என்று யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை. கண்ணாடி பொம்மையை போல தான் ஒவ்வொரு மனதையும் அவன் பார்த்துக்கொண்டான்.

நெடுநாட்களுக்கு பின் பேசிக்கொள்ளும் பொழுது ஒரு புன்னகை தரும் மனமகிழ்ச்சியை வேறெந்த பழிவாங்கலும் தரப்போவதில்லை! எந்த மனதையும் காயப்படுத்த கூடாது என்பதற்கு Faizalஐ விட சிறந்த example எனக்கு தெரிந்ததில்லை. அதை கடைப்பிடிப்பதே அவனிடம் நான் செய்ய மறந்த வாக்குறுதிகளுக்கும், கேட்க மறந்த மன்னிப்புகளுக்கும் ஈடாக இருக்கும்.

Miss you Hameed Faizel! Forever & ever..

Saturday 1 March 2014

அதே காதல் வரல??


Apart from the technical excellence with

1) Santosh Sivan's breath taking visuals, intrusive tones, mirrors popping up & down

2) A.R. Rahman's entry in all crucial moments of the scene like where Anandan crosses his extremes from one mood to other, where he stands without an answer for Kalpana's question about chances of him falling in love with her


3) Suresh Urs's editing with some of the most influential fade-outs I've seen in my life..

4) Mohanlal's exceptional performance..

5) And to top all the dangerous and 'easy to pull you' pit fall of the scene Aishwarya Rai Bachchan's enchanting beauty..

I would celebrate this scene for its highly stylized dialogues by Suhasini.. Just when he says that 'Namba mudiyadha saayal..' (Unbelievable resemblance!) you will begin to wonder how long it will take to see another classic to beat this!!
                                                     
 
"ஆமா.. யாரு புஷ்பா?

அடிபட்டு விழுந்தப்ப ஒரு தடவ கூப்டீங்க..
மயக்கத்துல என்னை பார்த்தவுடனே ஒரு தடவ.
ஹாஸ்பிடல்கு வெளிய ரெண்டு தடவ..
மொத்தம் நாலு தடவ..
யார் இந்த புஷ்பா?
எனக்கும் புஷ்பாக்கும் என்ன சம்பந்தம்?"

"புஷ்பாவுக்கு தலைகீழா ஒரு உருவத்த படைக்க முடியும்னா அது நீ தான்."

"எப்டி?"

"புஷ்பா அடக்கமானவ.."

"நான்?"

"அடக்கம்னா என்னன்னே தெரியாதவ நீ."

"புஷ்பா புத்திசாலி..
நாலு வார்த்த பேச வேண்டிய இடத்துல ஒரு வார்த்த பேசுவா.. நீ பேச்ச நிறுத்த பணம் கொடுக்கணும்.."

"ஆங்.." (continues listening..)

"புஷ்பா குடும்ப பொண்ணு..
முழங்கால் அளவு முடி..
பொறுமைசாலி.
மென்மையான குணம்.
இருக்குற இடம் தெரியாது.
பெரியவங்க கிட்ட மரியாதை.
தங்கம் மாதிரி நல்ல குணம்."

"ம்.. அப்புறம் சொல்லுங்க.."

"உனக்கு படிச்ச திமிரு..
நுனிநாக்கு இங்கிலீஷ்.
புத்திசாலின்னு கர்வம்.
யார கவுக்கலாம்னு எண்ணம்."

"அப்புறம் ஏன் என்னை புஷ்பானு அப்போ கூப்டீங்க?
ஏன் என்னை புஷ்பானு கூப்டீங்க?"

"உனக்கும் அவளுக்கும் ஒரே முகம்.

அதே கண்ணு..
அதே மூக்கு..
அதே வாய்..
நம்ப முடியாத சாயல்.."

"சும்மா பொய் சொல்றீங்க.. நான் நம்ப மாட்டேன்.."

"உன்ன நம்ப வைக்க புஷ்பாவ இங்க கொண்டுவர முடியாது.."

"ஏன்? அவங்க இல்லையா?"

"புஷ்பா முகமே தான்.."

"நான் நம்ப மாட்டேன்..
ஆனா நல்லா இருக்கு.."

"புஷ்பா உங்க மனைவியா?"

"ஹே! பாத்து.." (when she miss her balance in the support! few seconds before he begins to fall for her..)

"ரொம்ப காதலிச்சீங்களா?
என்னையும் காதலிக்க போறீங்களா?"

"பாருங்க.. அதே கண்ணு.. அதே மூக்கு.. அதே முகம்..
அதே காதல் வரல?"

Thursday 27 February 2014

ராஜனோடு ராணி வந்து சேரும்..

"கங்கைக்கொரு வங்க கடல் போல் வந்தான்.. அவன் வந்தான். 
மங்கைக்கொரு இன்பக்கனா அவன் தந்தான்.. அவன் தந்தான். 
கண்ணில் என்ன வண்ணங்கள்?
சின்ன சின்ன மின்னல்கள்..
ஓர் காதல் பூத்ததோ?
தக்கத்துணை வாய்க்காமல், பெண் வாடினாளோ?
பக்கம் வந்து கை சேர, பண் பாடினாளோ?
ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது கானம் தான்..
 
ராஜனோடு ராணி வந்து சேரும்..
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்..
"

நான் ஒரு sapio-sexual. (One who finds intelligence the most sexually attractive feature). அதாவது எனது காதல் என்பது அறிவு சார்ந்தே அமையும் என்று எண்ணுபவன். ஒரு பெண்ணின் intellectual side, நுணுக்கமான உணர்வுகள், மனிதர்களை அவள் அணுகும் விதம், கலை - இசை - இலக்கியம் குறித்த அவளது பார்வையே அவள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அழகை மட்டுமே சுமந்திருக்கும் பெண்கள் மீது எனக்கு aversion தான் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. தன் மனதினை பின்பற்ற தெரிந்த ஆணின் - பெண்ணின் தேடல் தானே காதல்! அதை மீறி அழகு மட்டுமே முதலிடம் வகிக்கும் காதல்களில் சலிப்பு தட்டிவிடும் என்பதென் கருத்து!

பாலு சார் வாழ்க்கையின் resemblance அவரது பல படங்களில் முக்கியமாக இந்த களத்தில் வெளிவந்திருக்கிறது. ரசனையான ஒரு பெண்ணிடம் தன் மனதின் அலைக்கழிப்புகளுக்கு ஒரு வடிகால் தேடும், விரக்தியில் இருக்கும் ஒரு ஆண் காதலுறுவது.. 

                                  

இங்கே ஒரு ஆணின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் அவனை மையல் கொள்ள செய்கிறாள் ஒரு பெண்! அவளிடம் இருக்கும் spark அவனை ஈர்த்துக்கொள்கிறது. அதில் இருக்கும் தார்மீக நெறி மீறல்கள், பின் விளைவுகள் எதையும் யோசிக்காமல் அவளோடு ஒரு உறவினை ஏற்படுத்திக்கொள்கிறான். அப்போது வருகிறது இந்த பாடல்.

மிகவும் classic ஆன பத்து இளையராஜா பாடல்களில் இதை நிச்சயம் சேர்க்கலாம். ஒரு ரம்மியமான tone பாடல் முழுதும் வழியும். ஹீரா மேல் ஒரு பெரும் காதலையே நான்கைந்து நிமிடங்களில் visuals உருவாக்கி விடும். சித்ரா - உன்னி கிருஷ்ணன் குரல்கள் வாயசைப்பில் சிறைபடாமல் சுதந்திரமாக திரிவதால் காட்சிகளில் வரும் சிற்பங்களூடும் - நீர் வீழ்ச்சிகளூடும் இசை அலைந்து, நனைந்து வரும்.

பாட்டில் நான் பெரிதும் ரசித்த விஷயம் ஹீரா தான்! இத்தனை gracious - charming ஆக பாலு சார் வேறு எந்த நடிகையையாவது காட்டியுள்ளாரா என்று தெரியவில்லை! அந்த கதாபாத்திரம் ஈடுபடுவது ஒரு தர்மத்திற்கு முறையான செயல் என்பதை தாண்டி அவரிடம் ஒரு கண்ணியத்தன்மையும், மரியாதையும் நமக்கு ஏற்படும். அவரது cotton sarees, brownish hair-style எல்லாமே அவரது கதாபாத்திரத்தை அத்தனை உயிர்ப்புடன் present செய்யும்.

P.S :: இந்த படமும், பதிவும் இந்த பாட்டில் ஓர் exceptionally beautiful தேவதையாக வலம் வரும் ஹீராவை சமீபத்தில் எனக்கு நினைவூட்டிய Karthickeyan அண்ணாவுக்கு dedicated..

ஓ வசந்த ராஜா..!

இன்று காலை ஏதோ ஒரு சேனலில் 'ஓ வசந்த ராஜா..' பாடலை பார்த்தேன். முதல் முறை பார்க்கும் போதே சில பாடல்கள் அதன் வித்தியாசமான செய்நேர்த்திக்காக மனதில் பதிந்துவிடுகிறது. அப்படி வசீகரித்த ஒரு பாடல் இது. பாடலின் தொடக்கத்தில் நாயகன் மேல் சட்டையின்றி கடற்கரையில் படுத்திருப்பதும், அவனது முகமும் சட் சட்டென்று இசைக்கேற்ப காட்டப்படும். அப்படி ஒரு தொடக்கத்தை நான் அதுவரையோ, அதன் பின்னரோ வேறெந்த பாடலிலுமே கண்டதில்லை! அதீத காதல், seduction மற்றும் ecstasy - இதன் மையப்புள்ளி ஒன்றில் இந்த பாடல் இருக்கும். பல நாட்கள் கழித்தே இந்த பாடலை இயக்கி, ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா என்றறிந்தேன்!

படத்தில் இந்த பாடல் ஒரு மிக அழகான, குறும்பான, பாலுமகேந்திராத்தனமான தருணத்தில் இடம்பெறும். பாலு சார் படத்தில் அநேகமாக வரும் 'யோவ்.. ரொம்ப தான் பண்ணுறியே..' 'ஏன்யா..' என்ற செல்லமான காதல் வசனங்களே! பார்த்தவுடன் புன்னகைக்க வைப்பவை! அதன் நீட்சியாக நாயகன் அவளை தன் காதலி என அங்கீகரித்த ஒரு கணத்திற்கு பிறகு பாடல் இடம்பெறும்!

பாட்டின் இறுதி சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் இலை மறை காய் கவிதையமைப்புக்காக.. ஜானகியின் பிரத்யேகமான குரலுக்காக.. சரணத்தின் கடைசி வரியில் (தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 'பால் அபிஷேகம்..' என்ற வார்த்தை வரும் இடத்தில்..) இளையராஜா க்ஷண நேரத்தில் நடத்திடும் ஜாலத்திற்காக..

"ஆராதனை நேரம்..
ஆலாபனை ராகம்..
அலைபாயுதே தாகம்..
அனல் ஆகுதே மோகம்!
என் மேகமே வா வா!
இதழ் நீரைத் தூவு!
மன்மத கோயிலில் பால் அபிஷேகம்..
"

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் கனவுலகில் அவன் தன் காதலியை ரசிப்பதும், ஆராதிப்பதும், வர்ணிப்பதும் சலிக்க சலிக்க காட்டப்பட்டுள்ளது. அவன் காண விரும்பும் உடையில் தான் நாயகி நமக்கு காட்டப்படுவாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு பெரும் புரட்சி. Path-breaking என்றே சொல்வேன். பாட்டு நாயகியின் கோணத்தில் நகர்கிறது. அவளது கனவில் அவள் காண விரும்பும் அவளது காதலன் பிம்பங்கள் நிறைந்து இயங்கும். அந்த பாடல் நெடுகிலும் பானுசந்தர் மேல் சட்டையின்றி, shorts அணிந்தோ - pant அணிந்தோ இருப்பார். பானுசந்தரை பார்க்கும்போதெல்லாம் அர்ச்சனா ஒரு காமத்தில் நனைத்த வெட்கத்தை முகத்தில் அணிந்திருப்பார். 

                                                                                         

உதாரணத்திற்கு கோவிலில் மேல் சட்டையின்றி - வேஷ்டி அணிந்து பானுசந்தர் நிற்பது போல் ஒரு காட்சி வரும். அப்போது பூஜை தட்டொன்றுடன் சந்நிதியில் இருந்து வெளிவரும் அர்ச்சனா அத்தனை வெட்கத்தை தன் கண்களிலும், சிரிப்பிலும் காட்டி தலையை குனிந்து கொள்வார். இது தான் பாட்டின் ஆதார கருவே. ஒரு ஆணால் தன காதலையோ - காமத்தையோ எளிதே வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய சமூகத்தில் அதிகம் பேசப்படாத, சொல்லபடாத பெண்ணின் காதலை - காமத்தை அவளது மனமாகவே சிந்தித்து காட்டியது பாலு சார் மட்டும் தான்!

http://www.youtube.com/watch?v=SYXN_BBvVac

Thursday 13 February 2014

அழியாத கோணங்கள்..

"நீ இல்லாமல் எது நிம்மதி..
நீ தான் என்றும் என் சந்நிதி.. "

இரண்டு நாட்களுக்கு முன்பு ப்ரவீண் பிரசன்னாவும் நானும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேசும் பொழுது எங்களின் அத்தனை ஆதர்ச இயக்குநர்களின் மேலும் ஏதேனும் ஒரு விதத்தில் எங்களுக்கு பிடிக்காத, அல்ல விரும்பாத விஷயங்கள் இருந்தன. மணிரத்னம் உட்பட.

நாங்கள் இருவரும் கருத்தொன்றி குறை சொல்ல முடியாத இயக்குநராக சிலாகித்தது பாலு சார் தான்! 

                                            


அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு முழுமையான கலைஞனால் வாழக்கூடிய வாழ்க்கை. அந்த பெயரே அந்த கலைஞனுக்காக செய்யப்பட்டதே! எத்தனை விருதுகள் - வீழ்ச்சிகள் - சரிவுகள் - சாபங்கள் பெற்ற பொழுதிலும் கலையும் காமிராவும் இவர் சொன்ன சொல்லுக்கு மறு சொல் சொல்லாமல் ஆடின!

எந்த தலைமுறைக்கும் சினிமா என்பது பொழுதுபோக்கு என்றே அறிமுகமாகிறது. பின் பாலு சார் போன்றவர்கள் அதன் மற்றொரு முடிவெளி இல்லாத வனாந்தரத்தை காட்டுகின்றனர். பாலு சாரின் படைப்புகள் ஆத்மார்த்தமானவையாக இருந்ததற்கு காரணமே அவரது வாழ்க்கை தானோ என்று நினைத்துக்கொள்வேன். அத்தனை நுட்பமான வாழ்வியல். சினிமாவை மட்டுமே சுவாசித்த வாழ்க்கை.

படைப்பின் அதீதமான தருணம் ஒரு ஆகச்சிறந்த படைப்பை உருவாக்குவது. அதனினும் உயர்ந்தது படைப்பாளிகளை படைப்பது. "ராமன் அப்துல்லா" எடுத்து ஐந்து வருடங்கள் கழித்து "ஜுலி கணபதி". "அது ஒரு கனாக்காலம்" பின் எட்டு வருடங்கள் கழித்து "தலைமுறைகள்"! வணிகம் கழுத்தில் கத்தி வைத்த நேரங்களில் எல்லாம் சினிமாவிற்கு வெற்றிமாறனையும், பாலாவையும், சசிகுமாரையும், ராமையும் பெற்று கொடுத்திருக்கிறார்.

அழகியலை அறிமுகம் செய்ததே பாலு சார் தான். ஒரு டூயட் என்பது நடனம் என்ற மரபை வலிந்து உடைத்தவர். புல்லில் அமர்ந்து கிடார் வாசிக்கும் பிரதாப் போத்தனை காதல் பொங்க ஷோபா பார்ப்பதில் தெரிந்த காதலும், அர்ச்சனாவின் கருவிழியும், மௌனிகாவின் சிரிப்பும், பிரியாமணியின் பார்வையும் வேறெந்த நேரத்திலும் எந்த இயக்குநராலும் பெற முடியாதவை.

சில நாட்களுக்கு முன் தலைமுறைகள் பற்றி எழுதியிருந்த போது 'கொட்டும் மழையில் தன் அத்தனை கட்டுப்பாட்டையும் மறந்த அந்த தாத்தா நனைவது.. மரணத்திற்கு முந்தைய கணங்கள் என்பதால் அது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.. அவரது முழுவாழ்வையும் பேரனுடன் நனைத்த அந்த மழை, சலவை செய்தது போல் இருந்தது.' என்று எழுதியிருந்தேன். தொப்பி இல்லாமல் பார்த்தறியாத பாலு சார் தன் முகமாக நடித்ததும் அந்த காட்சி இறுதியில் "தாத்தாவ மறந்துடாத.. தமிழையும் மறந்துடாத" என்பதும்.. அந்த படம் எதை நினைத்து பாலு சார் எடுத்திருப்பார் என்று யோசிக்கிறேன்.

சற்று முன்னம் ஒருவரின் இடுகையில் சொன்னது போல் 'பாலு சாரை பொறுத்தவரை RIP என்பது Rest in Photography என்றே பொருள் கொடுக்கிறது!

மௌனம் என்பதன் உருவம் பாலுமகேந்திரா வைக்கும் கோணத்தில் கட்டாயம் இருக்கும். சொக்கலிங்க பாகவதரோ சுப்பிரமணியோ.. இவரது காமிரா முன் காட்டிய மௌனம் அழியவே அழியாதவை.

சினிமாவின் மௌனமாகவே அவரது இழப்பு இருக்கப்போகிறது.

Sunday 2 February 2014

நுண்ணரசியல் :) :)

மணிரத்னம் படங்களின் நடுநிலைமை பற்றி ஒரு விவாதத்தை இப்போது தான் வாசித்தேன். நுண்ணரசியல் - ஆழமான புரிதல் என்று நீண்டு அவருக்கு எப்போதுமே தெளிவான அரசியல் பார்வை இல்லை என்று முடிந்திருந்தது.

ஏற்கனவே இதை மையப்படுத்தி காட்சிப்பிழையில் யமுனா ராஜேந்திரன் அத்தனை மணிரத்னம் படங்களையும், அந்தந்த கதாபாத்திரத்தின் கதைகளாக பார்க்காமல் அரசியல் ரீதியாக அணுகுகிறேன் என்று Post Mortem செய்து கொண்டிருக்கிறார்!

விட்டால் 'அலைபாயுதே'யை கூட "தாம்பரம் ரயில் ஊழியர்களின் வாழ்வியலை மணி புரிந்து கொள்ளவே இல்லை!" என்று சொல்வார்களோனு யோசிக்கிறேன்!

Saturday 1 February 2014

வாழிய வாழியவே!

தமிழ்நாட்டில்.. குறிப்பாக Engineering படிக்கும் மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களில் பெரும்பாலானவை ஒரே வகை.. ஒரே கதை தான். ஒரு மாணவன் இருப்பான். (கண்டிப்பாக Mechanical Engineering தான் படித்து கொண்டிருப்பான்..)

அவனுக்கு நாலு நண்பர்கள். ஆங்காங்கே Mechனா Gethuடா போன்ற வசனங்கள் தெறிக்க திடீரென அந்த நாயக மாணவனுக்கு ஒரு காதல் வரும். காதல் என்றால் அப்படி ஒரு அமரக்காதல். "மச்சி.. அது என் Figure மச்சி" காதல். நண்பர்கள் நாயகனால் திடீரென புறக்கணிக்கப்படுவார்கள்.

காதலர்கள் Cell phoneல் பேசிக்கொள்ளும் montageகளுடன், படம் எடுக்கப்பட்ட நேரத்தில் hit ஆன ஒரு Harris / Rahman பாடல் பின்னணியில் அடிக்கடி வரும்! நகைச்சுவைக்காக 'தென்பாண்டி சீமையிலே..' பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். தல - தளபதி போன்ற இளைஞர்களின் முக்கியமான தேசிய பிரச்சனைகள் கூட அலசப்பட்டிருக்கும்.

படம் நெடுகே "சரக்கடிக்கலாமா?" என்ற கேள்வி தொக்கி நிற்கும். காதலில் தோல்வியுற்றோ - ஏமாற்றபட்டோ நட்பின் அருமையை உணர்ந்த நாயகனை சூழ்ந்த நண்பர்கள் - "இவளுங்கள நம்ப கூடாது மாமா!", "நாங்க இருக்கோம் மச்சி" என்று சொல்ல.. காவியம் இனிதே நிறைவுறும்!!

இந்த செவ்வியல் படைப்புகள் குறைந்தது 15 நிமிடங்களாவது நீடிக்கின்றன.

இதில் ஒன்றிரண்டு குறையலாம். இதற்கும் மேலே பல அற்புத தருணங்கள் சேரலாம்! அப்படி ஒரு உன்னத படைப்பை இன்று பார்த்தேன்!!

'இவ்வளவு தான் சினிமா!' என்ற மதிப்பீட்டில் படத்தை இயக்குவது இருக்கட்டும். பெண்களை பற்றியும், காதலை பற்றியும் இளைஞர்கள் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள்! இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதெல்லாம் நினைத்தால் புல்லரித்தது!


— feeling "Lifela romba periya aala varuveengadaa.." moment.

KADAL Memories!!!


One year since KADAL got released!

What a journey it was!

                          

From the very first single I heard through MTV coke studio performance of Nenjukkulla by Shakthisree Gopalan & A.R. Rahman, it was like a thrilling ride. That 5 seconds teaser when nothing but a young man riding into a deep sea with Elay Keechan humming at background thrilled me so much. Can't express those exciting moments when I heard Adiye for the 1st time. Can't remember how many times I would have listened to Anbin vaasale! (And the happiest thing about the album is : Won a original soundtrack CD, my 1st ever original CD in Sony Music India's Kadal contest!)

And then the trailer came. I was literally flying when Mani sir came out of his comfort zone! "Yaarula andha dhevadha? Naan maatha mudiyadha thommaya mathunadhu?", "Enakku pidichirukku!" Alll that drove me crazy! And that gave me a spark to read Jeyamohan! (And I was really blessed to spend a day with the writer later, exploring some very interesting things in the making of the film.)

Was counting every second & minute to reach the Feb 1, 2013. It was a pleasure to see Gautham's look, new stills, Thulasi Nair's face.. (Finally!!!) She did impressed me with her performance in the film. Truly an Angelic performance! (Though her character was not that well developed as Mani himself said "I'm happy with most of the film, except for the Bea track, which I wasn't able to crack correctly.")

And yes! I do agree. I was disappointed by the 1st watch. With that complicated theme & everything conveyed through symbols & dialogues.. (And that's where I made a point that not to watch a film like this in a pathetic theater atmosphere or with impatient audience who utters 'Ssss...' for every 2 minutes..) And as Baradwaj Rangan says, the most interesting aspect of Kadal – at least for longtime followers of this director, a self-confessed atheist – is the explicit religiosity. And then with repeated watchings.. Man! What to say! Kadal extended like a Kadal.

This film gave me a chance to meet some very interesting people in Facebook. Have spent hours discussing with them about various brilliant moments in the film from camera angles to frames.. from a minute dialogue that gets faded by a BG score (like Bea asking Father Sam, "Ungalukku dhaan porandhappo thanga thottillaam senjaangalaame. Apdiyaa?") to sub-textual elements embedded throughout the film (like the heavenly light that falls on Celina when she betrays Sam for Bergmans) Together we discovered many things.

Thomas, Beatrice, Father Sam, Bergmans, Celina. Each character fascinated me in its own way. Despite the final version of Kadal being differed heavily from what Mani thought to bring on screen.. [Wish he release the Director's cut atleast for this film!]

Should thank Baradwaj Rangan for that detailed coast analysis on Kadal. (Even we just can't thank you enough for Conversations with Mani Ratnam itself. Thats a boon to us actually! What else can possibly be the biggest gift to fellow ManiRatnam fans like me?)

http://baradwajrangan.wordpress.com/2013/02/03/kadal-coast-analysis/

That analysis helped me to dive even more deeply! "But really, Mani Ratnam and God. Who would’ve thought?" That wonder made us to dissect Kadal keenly! That's the only review where I got to know how many things have been gone unnoticed in this epic attempt of a man who still searching for something! [Wannabe reviewers all over there can learn how a review for complex film should be from that!]

I should confess that I have spent days in arguing with people who said "Mani's period is over. Kadal is such a dumb film I've ever seen". Have seen hell lot of "Epdiyum padam flop dhaane?" people (Did you produce his films?) And then I got the most valuable lesson from this film, "Better stay away from someone who can just speak but can't listen!"

Though the film had its own flaws, I can bet you that if not Mani no one.. just no one.. will take such a leap step!

Thank you Mani Ratnam sir! _/\_

Thanks for this riveting piece of work! If someone asked me in my future.. about films that fuelled my passion Kadal will be there in 1st place!

Even when someone asks me 5 best films of Ratnam, I can happily add Kadal for elevating both the maker & viewer to a different level.
feeling grateful to Mani Sir

Wednesday 1 January 2014

Alaipayuthey - "Convincing"


Sharing a very interesting scene from Alaipayuthey. In 100 years of Indian Cinema (Even from the birth of man-kind..), a boy convincing a girl - to accept his love is a cliche actually! Yet this one is special, matured & unforgettable (to me atleast..).

A Classy class for all aspiring film-makers to set a conversation in a film!
                                                               

"யே.. என்னாச்சு?"

"இது சரியா வராது போலிருக்கு..
விட்டுடலாம்..
எல்லாத்தையும் மறந்துட்டு கை குலுக்கிகலாம்..
தோள் shrug பண்ணிக்கலாம்..
bye சொல்லிடலாம்..
உலகம் நின்னா போய்டும்..?"

"எங்க அப்பா ஏதும் தப்பா பேசுனாரா?"

"ஒன்னும் சரி வரல..
பேசுனாங்க..
தப்பா பேசுனாங்க..
தாறுமாறா பேசுனாங்க..
இந்தியா பாகிஸ்தான் பேச்சு மாதிரி ஆயிடுச்சு."

"ஷக்தி.. அவங்க ரெண்டு பேருமா கல்யாணம் பண்ணிக்க போறாங்க? நீயும் நானும் தான்.. சும்மா ஒரு மரியாதைக்கு கேட்டோம்.."

"கார்த்திக் என்னை என்ன செய்ய சொல்ற?"

"நம்ம விருப்பத்துக்கு அவங்க மதிப்பு கொடுக்கலைனா அவங்கள விட்டுடலாம்.."

"என்னால முடியாது.."

"என்ன முடியாது?"

"அப்பா, அம்மா, வீடு, நாய்க்குட்டி எல்லாத்தையும் என்னாலவிட முடியாது.."

"அப்டினா.. இந்த காதல் உனக்கு அவ்ளோ பெருசில்ல?"

"உனக்கு என்ன எவ்ள நாளா தெரியும்?
இருபது வாரமா?
எங்க அப்பாம்மா எனக்கு இருபது வருஷமா உயிர்.
உனக்காக நான் அவங்கள விட முடியாது.."

"ஆனா உனக்காக நான் எத வேணா விட்டுட்டு வருவேன்.."

"இன்னிக்கி ஒரு பொண்ணுக்காக அம்மா அப்பா எல்லாரையும் விட்டுட்டு வருவ.. நாளைக்கி இன்னொரு பொண்ணுக்காக என்ன விட மாட்டேன்னு என்ன நிச்சயம்?"

"Hello.. உங்க logic சகிக்கல..
இப்ப என்ன? தியாகமா? நான் தான் பலியா?"

"அது என்ன நமக்குள்ள அப்டி ஒரு காதல்?
பார்த்தோம்.
பேசுனோம்..
கொஞ்ச சுத்துன..
துரத்துன..
சிரிக்க வச்ச..
இப்ப அழ வைக்கற..
அவ்ளோதான்..
நான் முன்னாடியே No சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப?"

"உனக்கு அதிர்ஷ்டம் இல்ல.. நீ கொடுத்து வச்சது அவ்ளோதான்னு நெனைப்பேன்.."

"இப்போ அப்டி நெனைச்சுக்கோ.."

"ஓய்.. இரு.. ஷக்தி.."

"நீ சொல்றது சரி.. இந்த காதல் கீதல்லாம் பெரிய கத்திரிக்காய் இல்ல.. ஒத்துக்குறேன்.
ஆனா இப்போ கை விட்டுடாத.
கொஞ்சம் டைம் கொடு..
ஒரு வாரம்..
பத்தாம் தேதி வரைக்கும்..
அதுக்கப்றமும் இப்படியே பீல் பண்ணுனா சொல்லு,, விட்டுடுவோம்.."

"ஒரு வாரத்துல என்ன ஆக போகுது? எதுக்கு இந்த unnecessary?"

"ஒரு வாரத்துல என்ன வேணாலும் ஆகலாம்.."

<பார்த்து..>

"நான் உன்ன convince பண்ணலாம்..
நீ மனசு மாறலாம்..
இல்ல நான் வேற ஒரு பொண்ண பார்த்து மயங்கி விழுந்தடலாம்.."

<ஹே.. என்ன பண்ற நீ?>

"ஷக்தி ஒரே வாரம்.. சும்மா.. meet பண்ணலாம் பேசலாம். ஓகே? சரியா?"

"முடியாது."

"எனக்காக சரின்னு சொல்லு.."