Saturday 1 February 2014

வாழிய வாழியவே!

தமிழ்நாட்டில்.. குறிப்பாக Engineering படிக்கும் மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களில் பெரும்பாலானவை ஒரே வகை.. ஒரே கதை தான். ஒரு மாணவன் இருப்பான். (கண்டிப்பாக Mechanical Engineering தான் படித்து கொண்டிருப்பான்..)

அவனுக்கு நாலு நண்பர்கள். ஆங்காங்கே Mechனா Gethuடா போன்ற வசனங்கள் தெறிக்க திடீரென அந்த நாயக மாணவனுக்கு ஒரு காதல் வரும். காதல் என்றால் அப்படி ஒரு அமரக்காதல். "மச்சி.. அது என் Figure மச்சி" காதல். நண்பர்கள் நாயகனால் திடீரென புறக்கணிக்கப்படுவார்கள்.

காதலர்கள் Cell phoneல் பேசிக்கொள்ளும் montageகளுடன், படம் எடுக்கப்பட்ட நேரத்தில் hit ஆன ஒரு Harris / Rahman பாடல் பின்னணியில் அடிக்கடி வரும்! நகைச்சுவைக்காக 'தென்பாண்டி சீமையிலே..' பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். தல - தளபதி போன்ற இளைஞர்களின் முக்கியமான தேசிய பிரச்சனைகள் கூட அலசப்பட்டிருக்கும்.

படம் நெடுகே "சரக்கடிக்கலாமா?" என்ற கேள்வி தொக்கி நிற்கும். காதலில் தோல்வியுற்றோ - ஏமாற்றபட்டோ நட்பின் அருமையை உணர்ந்த நாயகனை சூழ்ந்த நண்பர்கள் - "இவளுங்கள நம்ப கூடாது மாமா!", "நாங்க இருக்கோம் மச்சி" என்று சொல்ல.. காவியம் இனிதே நிறைவுறும்!!

இந்த செவ்வியல் படைப்புகள் குறைந்தது 15 நிமிடங்களாவது நீடிக்கின்றன.

இதில் ஒன்றிரண்டு குறையலாம். இதற்கும் மேலே பல அற்புத தருணங்கள் சேரலாம்! அப்படி ஒரு உன்னத படைப்பை இன்று பார்த்தேன்!!

'இவ்வளவு தான் சினிமா!' என்ற மதிப்பீட்டில் படத்தை இயக்குவது இருக்கட்டும். பெண்களை பற்றியும், காதலை பற்றியும் இளைஞர்கள் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள்! இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதெல்லாம் நினைத்தால் புல்லரித்தது!


— feeling "Lifela romba periya aala varuveengadaa.." moment.

No comments:

Post a Comment