Thursday 27 February 2014

ராஜனோடு ராணி வந்து சேரும்..

"கங்கைக்கொரு வங்க கடல் போல் வந்தான்.. அவன் வந்தான். 
மங்கைக்கொரு இன்பக்கனா அவன் தந்தான்.. அவன் தந்தான். 
கண்ணில் என்ன வண்ணங்கள்?
சின்ன சின்ன மின்னல்கள்..
ஓர் காதல் பூத்ததோ?
தக்கத்துணை வாய்க்காமல், பெண் வாடினாளோ?
பக்கம் வந்து கை சேர, பண் பாடினாளோ?
ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது கானம் தான்..
 
ராஜனோடு ராணி வந்து சேரும்..
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்..
"

நான் ஒரு sapio-sexual. (One who finds intelligence the most sexually attractive feature). அதாவது எனது காதல் என்பது அறிவு சார்ந்தே அமையும் என்று எண்ணுபவன். ஒரு பெண்ணின் intellectual side, நுணுக்கமான உணர்வுகள், மனிதர்களை அவள் அணுகும் விதம், கலை - இசை - இலக்கியம் குறித்த அவளது பார்வையே அவள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அழகை மட்டுமே சுமந்திருக்கும் பெண்கள் மீது எனக்கு aversion தான் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. தன் மனதினை பின்பற்ற தெரிந்த ஆணின் - பெண்ணின் தேடல் தானே காதல்! அதை மீறி அழகு மட்டுமே முதலிடம் வகிக்கும் காதல்களில் சலிப்பு தட்டிவிடும் என்பதென் கருத்து!

பாலு சார் வாழ்க்கையின் resemblance அவரது பல படங்களில் முக்கியமாக இந்த களத்தில் வெளிவந்திருக்கிறது. ரசனையான ஒரு பெண்ணிடம் தன் மனதின் அலைக்கழிப்புகளுக்கு ஒரு வடிகால் தேடும், விரக்தியில் இருக்கும் ஒரு ஆண் காதலுறுவது.. 

                                  

இங்கே ஒரு ஆணின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் அவனை மையல் கொள்ள செய்கிறாள் ஒரு பெண்! அவளிடம் இருக்கும் spark அவனை ஈர்த்துக்கொள்கிறது. அதில் இருக்கும் தார்மீக நெறி மீறல்கள், பின் விளைவுகள் எதையும் யோசிக்காமல் அவளோடு ஒரு உறவினை ஏற்படுத்திக்கொள்கிறான். அப்போது வருகிறது இந்த பாடல்.

மிகவும் classic ஆன பத்து இளையராஜா பாடல்களில் இதை நிச்சயம் சேர்க்கலாம். ஒரு ரம்மியமான tone பாடல் முழுதும் வழியும். ஹீரா மேல் ஒரு பெரும் காதலையே நான்கைந்து நிமிடங்களில் visuals உருவாக்கி விடும். சித்ரா - உன்னி கிருஷ்ணன் குரல்கள் வாயசைப்பில் சிறைபடாமல் சுதந்திரமாக திரிவதால் காட்சிகளில் வரும் சிற்பங்களூடும் - நீர் வீழ்ச்சிகளூடும் இசை அலைந்து, நனைந்து வரும்.

பாட்டில் நான் பெரிதும் ரசித்த விஷயம் ஹீரா தான்! இத்தனை gracious - charming ஆக பாலு சார் வேறு எந்த நடிகையையாவது காட்டியுள்ளாரா என்று தெரியவில்லை! அந்த கதாபாத்திரம் ஈடுபடுவது ஒரு தர்மத்திற்கு முறையான செயல் என்பதை தாண்டி அவரிடம் ஒரு கண்ணியத்தன்மையும், மரியாதையும் நமக்கு ஏற்படும். அவரது cotton sarees, brownish hair-style எல்லாமே அவரது கதாபாத்திரத்தை அத்தனை உயிர்ப்புடன் present செய்யும்.

P.S :: இந்த படமும், பதிவும் இந்த பாட்டில் ஓர் exceptionally beautiful தேவதையாக வலம் வரும் ஹீராவை சமீபத்தில் எனக்கு நினைவூட்டிய Karthickeyan அண்ணாவுக்கு dedicated..

No comments:

Post a Comment