Thursday 14 August 2014

குருநாத் தேசிகன்!

"நீங்க சொல்லி தள்ளிட்டீங்க நான் சட்டத்துக்கு கட்டுப்படாதவன்னு. நாப்பது வருஷத்துக்கு முன்னால இன்னொருத்தர் இருந்தாரு. அவரும் அப்போ சட்ட்டத்துக்கு கட்டுப்படாதவர் தான். இன்னிக்கி நம்ம அவர மகாத்மான்னு கூப்டுறோம். அவரோட காலத்துல, நாட்டுல எல்லாரும் அடிமையா கெடந்தோம். அப்போ அவரு புது சட்டத்த எழுதுனாரு. நம்ம விடுதலைக்காக. நான் மகாத்மா இல்ல சாமி. எனக்கு வியாபாரம் செய்யதான் தெரியும். உழைக்க தெரியும். வறுமை நல்லா தெரியும்.

ரெண்டே சட்டை, என் பொண்டாட்டி, ஒரு மச்சான்காரனோட பம்பாய் வந்தேன். மனசுல வெறி business பண்ணனும்னு. ஆனா இங்க வந்து முட்டி மோதுனதுக்கு அப்புறம் தான் தெரியுது எல்லா கதவையும் அடைச்சிட்டாங்கனு. அது தொறந்துதுனா அது பணக்காரங்களுக்கு மட்டும்தான் தொறக்கும். எல்லாம் சர்க்காரோட கதவு. உங்கள மாதிரி பட்டவங்க உருவாக்குனது. ஒன்னு ஓங்கி மிதிச்சா தொறந்தது. இல்லைனா சலாம் போட்டா தொறந்தது. நான் ரெண்டையும் பண்ணேன். எங்க ஓங்கி மிதிக்கணுமோ, அங்க மிதிச்சேன். எங்க சலாம் போடுன்னீங்களோ, 'வச்சுக்கையா சலாம்'னு போட்டேன். இன்னிக்கி என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. ஏன் இப்படி எட்டி உதைக்கிறான், साला! எதுக்கு சலாம் போடுறான்னு?

என்ன பண்ணிட்டேன்னு உங்களுக்கு இவ்ளோ கோபம் இப்போ?நான் முன்னுக்கு வந்துட்டேன்னா? இல்ல, வேகமா முன்னேறிட்டு இருக்கேன்னா? இல்ல, ஒரு சாதாரண கிராமத்தான் இப்படி பெருசா வளர்ந்துட்டு போயிட்டே இருக்கான்னு உங்களுக்கு எல்லாம் கோபமா?

நீங்க குத்தி காட்டுறீங்களே என் மேல. எது? இந்த exercise, customs.. அந்த tax, இந்த tax.. எல்லாம் குளறுபடின்னு. நான் தொழில் ஆரம்பிச்ச புதுசுல இந்த வார்த்தைக்கெல்லாம் என்ன அர்த்தம்னு எனக்கே தெரியாதுய்யா. படிப்படியா விழுந்து, முட்டித்தேய மேல வந்துருக்கேன். நாலு காசு மிச்சப்படுத்துறதுக்காக பைத்தோன்லேர்ந்து பம்பாய சுத்தி 25 km நடப்பேன். பெரிய பெரிய kerosene முட்டைகள முதுகுல தூக்கிட்டு.
                                        


பணத்தோட மதிப்பு என்னனு எனக்கும் நல்லாவே தெரியும். எங்க எல்லாம் சம்பாதிக்க வழி இருந்துச்சோ, அங்க எல்லாம் தேடி போய் சம்பாதிச்சேன். எனக்காக மட்டும் இல்ல. நம்பி இருக்குற 30 லட்சம் share-holdersகாகவும் தான்.

எனக்கு இந்த golf விளையாட்டுனா என்னனு தெரியாது. இந்த குதிரை raceக்கு எல்லாம் போக தெரியாது. ஆனா என்னோட businessல யாரும் என்னை அடிச்சுக்க முடியாது. Polyester எனக்கு நல்லா பண்ண தெரியும். Fibres, Chemicals.. அதுவும் A1 Qualityலங்க, இருக்குறதுலயே கம்மியான விலைல தயாரிக்கிறேன். இதான் நான் செஞ்ச குத்தமா? இதுக்கு தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமா?

Petrol bunkல attendantஆ இருந்துருக்கேன். டப்பாவ தூக்கிட்டு ஊரெல்லாம் அலைஞ்சிருக்கேன். எப்படி நம்ம நாடு world bank கிட்ட கையேந்திட்டு அலையுதோ பணம் குடுங்க குடுங்க நாங்க road போடணும்னு. ஏன் நம்ம தலைவிதிய நாம மாத்த கூடாதா? நம்மளோட, நம்ம தேசத்தோட. என்னைய இப்பவும் அதே மாதிரி டப்பாவ தூக்கிட்டு அலைய சொல்றீங்களா? நம்ம நாடு என்னிக்கும், இப்படியே கையேந்திக்கிட்டே இருக்கணுமா? ஏன் நாம முன்னுக்கு வரக்கூடாதா? நமக்கு ஏன் இன்னும் ஏழை நாடுனே பட்டம்? எல்லாரையும் தள்ளிக்கிட்டு நம்ம நாடு முதல் நாடா வர முடியாதுனு எங்கயாச்சும் எழுதி வச்சுருக்கா? நிச்சயம் வர முடியும். அங்க தான் வரேன். அந்த top வரேன்.

இந்த நிலைமைக்கு வர்றதுக்காக நான் எத்தனையோ இழந்துருக்கேன்ங்க. இந்த கையும் போச்சு. தண்டமா தொங்குது சனியன். உங்க பெரிய enquiry முடியுறதுக்குள்ள இன்னும் நான் என்னென்ன இழக்க போறேன்னு எனக்கே தெரியல. என்னோட புத்தி. என் குரல். ஆனா ஒன்னு மட்டும் என்கிட்டேர்ந்து நீங்க எல்லாம் பறிச்சிடவே முடியாது. அது என்னோட தைரியம். அத நான் இழக்க மாட்டேன். ஏன்னா என்னோட தைரியம், இங்க இருக்குற சாதாரண குடிமக்களுக்கு இருக்குற தைரியம். இந்த தேசத்தோட தைரியம்.
நீங்க எல்லாம் கூட்டு சேர்ந்துட்டு என்னை நிறுத்த பாக்குறீங்கல? நான் இங்க தனி மனுஷன் இல்ல. என் கூட சேர்ந்து முழு தேசமும் முன்னேறிட்டு இருக்கு. இந்த நாட்ட நிறுத்துறதுக்கான சக்தி உங்க யார் கிட்டயும் கிடையாது. அது உங்க சட்டத்தாலயும் முடியாது.

எந்த கதவுகள எல்லாம் மூடணும்னு நெனச்சிங்களோ அத எல்லாம் இப்போ தொறந்து போட்டாச்சு. நாங்க எல்லாரும் எப்பவோ உள்ள அடியெடுத்து வச்சிட்டோம். இப்ப யாரனு வெளிய தள்ள போறீங்க நீங்க? அய்யா! இந்த தேசத்தோட வளர்ச்சிய சோதிக்க என்ன மாதிரி enquiry அமைக்க போறீங்க? எங்க வளர்ச்சிய எந்த enquiryயால நிறுத்த முடியும் சொல்லுங்க!

அஞ்சு நிமிஷம் time கொடுத்தீங்கல்ல எனக்கு. நாலரை நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன். முப்பது second profit. லாபம். இதுதாங்க என் business. இப்போ இதுக்காகவும் சேர்த்து நீங்க தண்டனை தரணும்னு நினைச்சிங்கன்னா, தாங்க!

குருநாத் தேசிகன் தண்டனைக்கு பயந்தவன் இல்ல."