Wednesday 19 March 2014

HAMEED FAIZAL..


நேற்று symposium work முடிந்து வந்து கொண்டிருந்த போது அங்கப்பனிடமிருந்து message வந்திருந்தது. Conversations folderஐ open செய்யாமல் பார்த்தபோது "Our friend Hameed Faizal.." மட்டும் தெரிந்தது. ஏதாவது National level அல்லது State level போட்டியில் ஜெயித்திருப்பான் என்று மிக மெதுவாக அந்த messageஐ படிக்க தொடங்கினேன்.. Faizal மரணம் அடைந்ததை தெரிவிக்கும் message ஆக அது இருக்கும் என்று நினைக்கவே இல்லை..

மரணம் என்பதை சற்றே பக்குவமாக அணுக நினைத்தாலும் இந்த மரணம் அப்படி எந்த தத்துவத்திலும் சேராது. காரணம் Faizal!! இந்த உலகில் சராசரியாக நான் பார்க்கும் நண்பர்களில் ஒருவனாக Faizal இல்லை. Angelic தன்மை மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு மனிதன் போல தான் Faizal பழகுவான்.

சில வருடங்கள் Faizalம், நானும் ஒன்றாக படித்திருக்கிறோம். பார்த்திருக்கிறேன்.. அத்தனை பழக்கம் இருந்ததில்லை என்றாலும் 5th, 6th படிக்கும் போது Hi, Hello அளவுக்கு பழக்கம் இருந்தது. அவன் 7th 'A'வில் படித்தான். உபயதுல்லாஹ், ஆறுமுக சிவஷங்கர், அங்கப்பன் தான் அவன் gang. அவர்களோடு தான் இருப்பான். அப்பப்போ போய் பேசியிருக்கிறேன். பின் திடீரென்று ஏதோ ஒரு சம்பவத்தில் எங்களுக்குள் முரண் ஏற்பட்டது. அதன் பின் சில நாட்கள் பேச்சு வார்த்தை இல்லை.

என்னிடம் இருக்கும் மிகப்பெரிய கெட்ட பழக்கத்தை சொல்ல சொன்னால் அது நெருக்கமானவர்களிடம் கோபப்பட்டு பேசாமல் இருப்பது தான். நான் கோபித்து கொள்ளவே இல்லையென்றால் அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருக்கமாட்டார்கள்.

ஒரு வாரத்திற்குள் அவனே வந்து பேசினான். "இனி எப்பொழுதும் நமக்குள் சண்டையே வராது. Okவா?" என்றான். நான் அதற்கு சரி - வேண்டாம் எதுவும் சொல்லவில்லை. பிறகு.. 8thல் நாங்கள் இருவரும் ஒரே sectionல் படித்தோம். எந்த விஷயத்துக்குமே அவனிடம் ஒரு புன்னகை இருந்தது. அதை செலவழிப்பதில் அவனுக்கு தயக்கமே இருந்ததில்லை. 'வால.. போல..' என்பதை தாண்டி 'மச்சான்..' என்று நண்பர்களை அழைக்கும் பழக்கமே எனக்கு அவனிடமிருந்து தான் வந்தது.

Monthly exams வந்த போது நாங்கள் இருவரும் சேர்ந்து G.K testகு படித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. Match the followingல் ஒரு கை வைத்து மறைத்து answers சொல்லி பார்த்துக்கொள்வோம்.

அப்போது தான் 'அந்நியன்' படம் release ஆகியிருந்தது. அதில் விக்ரம் அந்நியன் ஆக மாறியவுடன் கண்ணின் கருவிழியை 'டப்.. டப்..' என்று உருட்டுவதை அப்படியே செய்து காட்டுவான்.

அவன் கபடி player. ஒரு active sports-person. Play groundல் வைத்து எதற்காகவோ அவனை திட்டியதற்கு P.E.T சாரிடம் சொல்லி கொடுத்துவிட்டான். அதன் பின் பல மாதங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

9thல் 'Spell Bee' competitionல் Finalsகு முந்தைய சுற்று வரை சென்று eliminate ஆகிவிட்டேன். மிகவும் upset ஆக உட்கார்ந்திருந்தேன். வீடு வரை வந்து "இதுக்குலாம் mood out ஆகாத. இன்னும் lifeல எவ்ளவோ stage இருக்கு" என்று சொல்லிவிட்டு போனான். நினைவில் இருப்பது வரை அது தான் Faizal என்னிடம் நேரடியாக.. கடைசியாக பேசியது.

11th, 12th வேற schoolல் சேர்ந்ததால் ஓரளவுக்கு இங்கு இருந்த நண்பர்களுடன் touch இல்லை. Faizal உடன் சுத்தமாக contact இல்லை. நான்கு வருடங்கள் கழித்து Facebookல் பேசினான். அவன் MITயில் சேர்ந்திருந்தான். நண்பனுடன் சேர்ந்து Shopping website (http://www.happyshoppie.in/) ஒன்று தொடங்கியிருப்பதாகவும், அதை பார்த்து பிடித்திருந்தால் share செய்யவும் சொன்னான். நான் "இத்தனை வருஷம் கழிச்சு பேசுற.. இவ்ளோ professionalலா தான் பேசுவியா?"னு கேட்டேன். இதே கேள்வியை நேரில் கேட்டிருந்தால் புன்னகை. இப்பொழுது ஒரு smiley அனுப்பினான். அந்த site நான் இன்றுவரை share செய்யவே இல்லை. அதன் பிறகு அவனிடமிருந்து Friendship day wishesம், என்னிடமிருந்து Ramzan wishesம் மட்டும் சொல்லிக்கொள்ளப்பட்டது.

அவனுக்கு ஒருமுறையாவது call பண்ண வேண்டும் என்று பல தடவை நினைப்பேன். பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று அது தள்ளி தள்ளி போனது. சில மாதங்கள் முன் school சென்றபோது பத்மா மிஸ் "Faizal எப்பிடிடா இருக்கிறான்" என்று என்னிடம் கேட்டது தான் அவனை பற்றி நான் யோசித்த கடைசி தருணமாக இருக்க வேண்டும்.

நேற்று மதியம் தான் 'Hesistationனாலோ, egoவினாலோ யாரிடம் கோபப்பட்டிருந்தாலும் மனதுக்கு பிடித்திருந்தால் நாமாக சென்று பேசிவிட வேண்டும்' என்று ஒரு வாதத்தில் பேச்சை நிறுத்தி பல மாதம் கழித்து நான் sorry கேட்ட ஒரு தோழியிடம் சொல்லியிருந்தேன். இனி எப்பொழுதுமே மன்னிப்போ, புன்னகையோ, 'மச்சான்..' என்று அழைப்போ தர Faizal இல்லை.. 
                                                      

சில நண்பர்கள் எத்தனை விலகி இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், எத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாலும் அவர்கள் மேல் இருக்கும் பிரியம் குறைவதே இல்லை. அப்படி ஒரு நண்பனாக தான் இருந்தான். அவனிடம் பழகத்தொடங்கிய நாள் முதல் இன்று வரை யோசித்தாலும் ஒரு குறை கூட அவனிடம் தெரியவில்லை.அவனது மொத்த வாழ்க்கையிலுமே எதிரிகள் என்று யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை. கண்ணாடி பொம்மையை போல தான் ஒவ்வொரு மனதையும் அவன் பார்த்துக்கொண்டான்.

நெடுநாட்களுக்கு பின் பேசிக்கொள்ளும் பொழுது ஒரு புன்னகை தரும் மனமகிழ்ச்சியை வேறெந்த பழிவாங்கலும் தரப்போவதில்லை! எந்த மனதையும் காயப்படுத்த கூடாது என்பதற்கு Faizalஐ விட சிறந்த example எனக்கு தெரிந்ததில்லை. அதை கடைப்பிடிப்பதே அவனிடம் நான் செய்ய மறந்த வாக்குறுதிகளுக்கும், கேட்க மறந்த மன்னிப்புகளுக்கும் ஈடாக இருக்கும்.

Miss you Hameed Faizel! Forever & ever..

No comments:

Post a Comment