Tuesday 1 October 2013

மணிரத்னம் எதிர்ப்பின் பின்னணி என்ன?

மணிரத்னத்தின் ராவணன் - கடல் :: இந்த படங்களை "மொக்கை" - "முடியல.." என்ற ரீதியில் ஊரெல்லாம் கேலி செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.. முன்பெல்லாம் அவர்களோடு விவாதிப்பேன்.. இப்போது அது எனக்கு சற்றே பழகி விட்டது..

ஆனால் திரைப்படக் காதலர்கள் என்ற குழுமத்தில் கூடவா ஒருவருக்கும் அந்த படங்கள் சொல்ல வந்தது புரியவில்லை.. நோலனை - டொரெண்டினொவை அங்குலம் அங்குலமாக அணுகும் மக்கள் சூழ் இடமான இங்கே யாருக்கும் இந்த முயற்சிகள் பிடிக்கவில்லையா?

ஒரே விதமான கதை சொல்லல் முறை - பாத்திர படைப்புகள் கொண்ட பாலாவை கொண்டாடி தினமும் இரண்டு பதிவாவது இங்கு பார்க்கிறேன்.. நேற்று ஒரு நீண்ட விவாதத்தில் "மணிரத்னம் ரோஜாவோடு தொலைந்து விட்டார்.. அவருக்கு ஆழமாக கதை சொல்ல தெரியாது.. பீல்டு அவுட்" என்ற ரீதியில் பலரது கமெண்ட் விழுந்தது.. மிஷ்கினை தூக்கிப்பிடிப்பவர்கள் கூட *மணிரத்னமா? அவர் தொண்ணூறுகளிலேயே தங்கி விட்டார் *என்று பேசினார்கள். மிகவும் நொந்து போன விஷயம்..

"மணிரத்னம், வைரமுத்து மாதிரி சாதிச்சவங்க இந்திய.. ஏன் ஆசிய சினிமால யாரு? அவங்கள நாம கொண்டாடுறோமா? கிடையாது. சத்தியமா கிடையாது" என்று செல்வராகவன் "இரண்டாம் உலகம்" இசை வெளியீட்டு விழாவில் காட்டமாக பேசியதன் மனவேதனை இப்போது புரிகிறது.

நமது கலாசாரத்தில் உலகத்தர சினிமாவை படைக்கும் ஒருவரை நிராகரித்து விட்டா நீங்கள் நோலனையும், இன்ன பிறரையும் கொண்டாடுகிறீர்கள்? புரியவே இல்லை!

No comments:

Post a Comment