Sunday 13 January 2013

Favourite song :: Lyrics

இந்த பாடல் இடம்பெற்றுள்ள படம் சந்தோஷ் சிவனின் "உருமி".  மொழி மாற்ற படம். முதலில் மலையாளத்தில் வந்த படம் இது.
                  
           வைரமுத்து இந்த படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த பாடல் ஒரு போர் வீரனுக்கும், போர் குணம் மிகுந்த பெண்ணுக்கும் இடையே வரும் காதலை சொல்லும் பாடல். ஹரிஹரன், ஸ்வேதா மோகன் பாட, தீபக் தேவ் என்னும் மலையாள இசையமைப்பாளர் இசையில் உருவான பாடல்.. திரையில் பிரித்விராஜ், ஜெனிலியா நடித்த பாட்டு..



                                     
"உறை விட்டு வந்த வாளோ?
ஒளி விட்டு வந்த வேலோ?
திருமகன் இவன் யாரோ?
திருவுளம் புரிவாரோ?


                                      


மடல் தொட்டு வந்த காற்றோ?
மலை தொட்டு வந்த ஊற்றோ?
ஒலியோ? ஒலியின் தெளிவோ? பிரிவோ?
விடமோ? மதுவோ?
இதில் நீ எதுவோ?

யாரோ? நீ யாரோ?
யாரோ? நீ யாரோ?

                                 


அதோ.. அதோ.. 
உன் இரு கரம் முறுக்கி களிறொன்று எறிகின்றாய்..
இதோ.. இதோ..
என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்..
அழகின் கர்வத்தில் ஆணி அறைகின்றாய்..
ஆடையோடு ஆவி கொண்டாய்..
என் உயிரை விழியால் உண்டாய்..
மலை போல் எழுந்தாய்.. மழை போல் விழுந்தாய்.. 

                                 
                                          
காதல் பூக்களின் வாசம்,
உன் கூந்தல் எங்கிலும் வீசும்..
பார்வைகள் என்னும் படை எடுப்பாலே,
பாதத்தில் கவிழ்ந்திடும் தேசம்..
எனை வெல்லும் பாகம் மிக பெரிது..
நன் தோற்கும் பாகம் மிக சிறிது..
காமம் தாண்டிய முனிவனும் உனது கண்கள் தாண்டுதல் அரிது..
உன் அழகினால் என்னை அழிக்கிறாய்..
நீ ஆணை கொள்ளும் பெண் நெருப்பா?"

No comments:

Post a Comment