Sunday 13 January 2013

Story of silk:: Dirty picture

இன்று "டர்ட்டி பிக்சர்" படம் பார்த்தேன்.. 

                                        

சில்க் ஸ்மிதா என்ற பெண் இந்த சமுதாயத்தில் சந்தித்த அவமானங்கள், துயரங்கள், துரோகங்கள், ஏளனங்கள் அப்படியே படமாக விரிந்திருக்கிறது..

வித்யா பாலன் போன்ற தேர்ந்த நடிகையால் மட்டுமே இது போன்ற கனமான, தைரியமான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும்.. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சில்க்காக வாழ்ந்திருப்பதால் தேசிய விருது தகுதி அடைந்துள்ளார்..

                                   

தன்னை இயக்குனர் வேண்டாம் என்று சொல்லும் போதும், இருக்கும் பணத்தில் சாப்பிடாமல் சினிமாவிற்கு செல்லும்போதும், தன் முதல் படத்தில் தன் பாட்டு இடம் பெற்றுள்ளதை பார்க்க தவிப்பதும், ரசிகர்கள் தன்னை திரையில் கொண்டாடுவதை பார்த்து மெல்லிய கர்வம் காட்டுவதும் வித்யாவின் நடிப்பிற்கு சாம்பிள் காட்சிகள்..

                                        

விருது வாங்கிவிட்டு தன்னை வெறுக்கும் மக்களை நோக்கி பேசும் காட்சியில் சில்க் சமுகத்தின் மீது கொண்ட கோபத்தை வீசுகிறாள்.. நாகரிகம் என்னும் போர்வைக்குள் புரண்டு கொண்டே ரகசியமாய் தன் படங்களை ரசிப்பவர்களை சாடுகிறாள்.. 

இண்டர்வல் காட்சிக்கு முன் அவள் சொல்லும் வசனம் - "இண்டர்வல்க்கு பின் மாற நான் ஒண்ணும் சினிமா இல்ல.. சில்க்..".. அவள் திரையில் மட்டும் நடிக்கிறாள்.. நிஜ வாழ்க்கையில் அல்ல.. 


                                       

காதல் தோல்விகள், தொழில் நஷ்டங்கள் அவளது வாழ்க்கையை புரட்டி போடுகின்றன. 

இறுதி காட்சியில் தன் வீடு நோக்கி வரும் போது கண்ணாடிகளில் தன் பழைய அழகிய முகங்கள் தெரிவது போன்ற பிரம்மை ஏற்படுகிறது.. அந்த காட்சியில் வித்யாவின் நடிப்பு உலக உயரங்களை தொடுகிறது.. முழு ஒப்பனையுடன்  சிகப்பு புடவை அணிந்து தற்கொலை செய்து கொள்கிறாள் சில்க்..
            
                                        

கன்னத்தில் அறையும் வசனங்களும், உறுத்தாத இசையும் துணை இருந்தாலும் வித்யாவின் நடிப்பில் படம் எதார்த்தத்தின் உச்சத்தை அடைகிறது..

இந்த சில்கின் கதை ஏன் தமிழில் முதலில் எடுக்கவில்லை? 


                                        

குருவி, சிவாஜி  போன்ற படங்களின் பட்ஜெட் செலவில் கால் பங்கு இந்த படத்திற்கு போதும்.. ஆனால் இந்த படம் சமூகத்திடம் கேட்கும் கேள்விகள், நம் படங்கள் கேட்காதவை.. 

இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக, மிக கண்ணியமான படைப்பு "தி டர்ட்டி பிக்சர்"..

No comments:

Post a Comment